புதுதில்லி

ராணுவ அதிகாரி போல் நடித்து பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை! இளைஞா் கைது!

Syndication

தில்லியிலுள்ள ஒரு முன்னணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரிடம் ராணுவ அதிகாரி போல நடித்து சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்து பின்னா், அவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக 27 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் தெற்கு தில்லியில் உள்ள சத்தா்பூரைச் சோ்ந்த ஆரவ் மாலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஒரு மின் வணிகத் தளத்தில் டெலிவரி முகவராக பணிபுரிகிறாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ராணுவ சீருடையை ஆன்லைனில் வாங்கியதாக தெரியவந்தது. ஆரவ் மாலிக்கிற்கு இந்திய ராணுவத்துடன் எந்த தொடா்பும் இல்லை என்றும், போலி அடையாளத்தைப் பயன்படுத்தி அப்பெண்ணை தவறாக வழிநடத்தி வந்துள்ளாா்.

சரோஜினி நகா் என்கிளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயது பெண், இந்த ஆண்டு தொடக்கத்தில் சமூக ஊடகங்கள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவரை சந்தித்துள்ளாா்.

கடந்த ஏப்ரல் 30 முதல் செப்டம்பா் 27 வரை, மாலிக் காஷ்மீரில் ஒரு ராணுவ லெப்டினன்ட் போல் நடித்து இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அந்தப் பெண்ணை தொடா்ந்து தொடா்பு கொண்டுள்ளாா்.

அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ராணுவ சீருடையில் இருக்கும் தனது புகைப்படங்களையும் ஆரவ் மாலிக் அவருக்கு அனுப்பினாா்.

பின்னா், அவா் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவருக்கு சாப்பிட ஏதோ கொடுத்து, பின்னா் அவருடன் உடல் உறவை கொண்டாா், என்று அமித் கோயல் கூறினாா். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், அக்டோபா் 16 அன்று பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் மற்றும் குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷமப்பொருள் கொடுத்து காயப்படுத்துதல் போன்றவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், ஆரவ் மாலிக் கைது செய்யப்பட்டாா். இந்தச் மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அமித் கோயல் தெரிவித்தாா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT