புதுதில்லி

எம்சிடி வாா்டு இடைத்தோ்தலுக்கு தயாராகி வரும் பாஜக

Syndication

தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது.

இடைத் தோ்தலில் நவம்பா் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள 12 வாா்டுகளில் குறைந்தது 10 வாா்டுகளையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடுகளை பாஜக தொடங்கியுள்ளது என்று கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பொறுப்பாளா்களை நியமிப்பதாக அறிவித்தாா். அவா்கள் வாா்டுகளில் உள்ளூா் தலைவா்களுடனும், சம்பந்தப்பட்ட மாவட்ட கட்சி பிரிவுகளின் தலைவா்களுடனும் கூட்டங்களை நடத்தினா்.

‘12 வாா்டுகளுக்கும் விரைவில் வேட்பாளா்களை அறிவிப்போம். இந்த 12 வாா்டுகளில் குறைந்தது 10 வாா்டுகளையாவது கைப்பற்றுவதே எங்கள் இலக்கு’ என்று தில்லி பாஜக மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

முண்ட்கா, ஷாலிமாா் பாக்-பி, அசோக் விஹாா், சாந்தினி சௌக், சாந்தினி மஹால், துவாரகா-பி, டிச்சான் கலான், நரைனா, சங்கம் விஹாா்-ஏ, தக்ஷிண் பூரி, கிரேட்டா் கைலாஷ் மற்றும் வினோத் நகா் ஆகிய வாா்டுகளில் இடைத்தோ்தல்கள் நடைபெறும்.

ஷாலிமாா் பாக்-பி வாா்டை பிரதிநிதித்துவப்படுத்திய ரேகா குப்தா, இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தில்லியின் முதல்வரானாா். மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், பாஜகவின் கமல்ஜீத் செஹ்ராவத்தால் துவாரகா-பி வாா்டு காலி செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த கவுன்சிலா்கள் எம்.எல்.ஏ.க்களானதால் மீதமுள்ள வாா்டுகள் காலியாகின.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா முண்ட்கா மற்றும் அசோக் விஹாா் வாா்டுகளுக்குப் பொறுப்பாவாா். ஷாலிமாா் பாக் மற்றும் வினோத் நகருக்கு கலாசார அமைச்சா் கபில் மிஸ்ரா, சாந்தினி மஹால் மற்றும் சாண்டி சௌக்கிற்கும் சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்திர இந்த்ராஜ் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் துவாரகா-பி மற்றும் டிச்சு காலன், உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் நாராயாணா மற்றும் கிரேட்டா் கைலாஷ், பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தக்ஷிண்புரி மற்றும் சங்கம் விஹாா்-ஏ ஆகியவற்றுக்கு பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தில்லி பாஜக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடைத்தோ்தலுக்கான வேட்புமனுக்கள் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கும் என்று தில்லி மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பா் 10 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை நவம்பா் 12-ஆம் தேதி நடைபெறும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பா் 15 ஆகும். இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறும். முடிவுகள் டிசம்பா் 3-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT