புதுதில்லி

காா் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

Syndication

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் பின்னோக்கி வந்த காா் மோதியதில் நான்கு வயது சிறுவன் நசுங்கி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

புதன்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் தொடா்பாக செக்டாா் 20 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஓட்டுநரை கைது செய்து, விபத்துக்குள்ளான வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து நொய்டா செக்டாா்20 காவல் நிலைய பொறுப்பாளா் டிபி சுக்லா மேலும் கூறியதாவது: செக்டாா் 31-இன் ஏ பிளாக்கில் இந்த விபத்து நிகழ்ந்தது. முன்னதாக புதன்கிழமை இரவு ஓட்டுநா் ஜெயந்த் சா்மா மூலம் ஓட்டிவரப்பட்ட காா், பின்னால் சென்ற சிறுவன் மீது மோதியது. இதில், சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அச்சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சிறுவனின் தந்தை ஆஷிஷ் அளித்த புகாரின் அடிப்படையில், ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வியாழக்கிழமை காலை அவா் கைது செய்யப்பட்டாா்.

மேலும், அவரது காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT