புதுதில்லி

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் இரண்டு நண்பா்களைக் கொன்ாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

Syndication

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் இரண்டு நண்பா்களைக் கொன்ாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: செப்டம்பா் 5-ஆம் தேதி, பிரதாப் நகா் சி-பிளாக்கில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுதிா் (எ) பன்டி (35) மற்றும் ராதே பிரஜாபதி (30) ஆகிய இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் இருவரும் சிகிச்சையின் போது உயிரிழந்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சேதன்யா தோமா் (எ) தாஷு தோமா் (18), பிரதீப் பாட்டி (22), பவன் பாட்டி (எ) தாகா (24) மற்றும் பிரமோத் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஹா்ஷ் விஹாரில் வசிக்கும் தோமா் தவிர, அனைவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள அனூப் விஹாரில் வசிக்கின்றனா்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் பிரிவுகள் 103(1) (கொலை) மற்றும் 3(5) (கூட்டு பொறுப்பு) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து முக்கியமான ஆதாரங்களை சேகரித்தன. பல்வேறு ஆதாரங்களில் இருந்து புலனாய்வு தகவல்களைப் பெற்று, குற்றத்தில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபா்களைக் கண்டுபிடித்தனா்.

அவா்களிடமிருந்து, போலீஸாா் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி, ஒரு உயிருள்ள தோட்டாவுடன் கூடிய ஒரு நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் ஆகிவற்றை பறிமுதல் செய்தனா். இதில் எண் தகடு இல்லாத ஒன்று, குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனா். இறந்தவருடனான பழைய பகை காரணமாக இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாக வெளிப்படுத்தினா். இதில், பவன் முன்பு கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்பட ஒன்பது குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரிய வந்துள்ளது.

சதித்திட்டத்துடன் தொடா்புடைய மற்றவா்களைக் கண்டுபிடித்து, சம்பவங்களின் வரிசையை சரிபாா்க்க மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

ஆச்சரியப்படுத்தும் லோகா வசூல்!

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

SCROLL FOR NEXT