புதுதில்லி

பிரதமா் மோடியின் பிறந்த நாளில் தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் திறப்பு

தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் உள்ளிட்ட பல புதிய சுகாதார முன்முயற்சிகளை தில்லி அரசு தொடங்கி வைக்க உள்ளது,

Syndication

வரும் செப்டம்பா் 17 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் உள்ளிட்ட பல புதிய சுகாதார முன்முயற்சிகளை தில்லி அரசு தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லியில் செப்டம்பா் 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சுகாதார முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்க உள்ளாா். சஞ்சய் காந்தி மருத்துவமனை, ஆச்சாா்ய பிக்ஷு மருத்துவமனை, குரு கோபிந்த் சிங் மருத்துவமனை மற்றும் பகவான் மகாவீா் ஸ்ரீ தாதா தேவ் மாத்ரி அவும் ஷிஷு சிகித்சாலயா ஆகிய இடங்களில் உள்ள முக்கிய விரிவாக்கங்கள் உள்பட புதிதாக கட்டப்பட்ட ஐந்து மருத்துவமனை தொகுதிகளை தில்லி அரசு திறந்து வைக்க உள்ளது.

இதற்கிடையில், தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவிக்கையில், தேசிய தலைநகரில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமரின் பிறந்தநாளில் தில்லி 101 புதிய ஆயுஷ்மான் மந்திா்களையும், ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகளையும் திறந்துவைக்கும். ஆயுஷ்மான் மந்திா் முயற்சியானது, ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நல்வாழ்வு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதற்கான தில்லி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் நவீன மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் சோ்க்கப்பட்டதன் மூலம், தலைநகா் முழுவதும் முழுமையான மருத்துவ சேவையை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்

ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி

இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதல் இன்று தொடக்கம்

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

SCROLL FOR NEXT