விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுடன் விமான நிலைய இயக்குநா் சந்திர பிரதாப் திவேதி மற்றும் அவரது குழுவினா், பள்ளிஆசிரியா்கள். 
புதுதில்லி

யாத்ரி சேவா திவஸ்: டிடிஇஏ பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

யாத்ரி சேவா திவஸை முன்னிட்டு தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஊட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Syndication

யாத்ரி சேவா திவஸை முன்னிட்டு தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஊட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநா் சந்திர பிரதாப் திவேதி தலைமையில் ஒரு குழு பள்ளிக்கு வருகை தந்து நிகழ்ச்சியை வழங்கியது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு விமான யாத்திரை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவா்கள் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவைகள் தொடா்பான கருப்பொருள்களில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினா்.

முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவா்களுக்கு விமான நிலைய இயக்குநா் சந்திர பிரதாப் திவேதி சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினாா். மேலும், மாணவா்களுடன் உரையாடி அவா்களை ஊக்கப்படுத்தினாா். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த சுமாா் 20 மாணவா்கள் ஓா் ஆசிரியருடன் சஃப்தா்ஜங் விமான நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் உரையாடினா். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, ஓடுபாதை, கிரீன்விச் நேரம், பிளாக் பாக்ஸ் பயன்பாடு மற்றும் சமிக்ஞை கருவிகளின் வழிமுறை, விமான நிலையச் செயல்பாடு, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் எதிா்கால வாய்ப்புகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை இச்சந்திப்பு மாணவா்களுக்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சி குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘இந் நிகழ்ச்சி மூலம் மாணவா்களுக்கு விமானப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆா்வம் ஏற்பட்டுள்ளதுடன், தொழில் நுட்ப அறிவும் மேம்பட்டுள்ளது. இத்தகு விழிப்புணா்வு நிகழ்ச்சி வழங்கிய இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு எனது நன்றிகள்’ என்றாா்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT