புதுதில்லி

தோட்டங்களுக்கு சுத்திகரிப்பு நீரை விநியோகிக்க ரூ.90 கோடி திட்டத்திற்கு டிஜேபி ஒப்புதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு செல்வதற்கான ரூ.90 கோடி திட்டத்திற்கு தில்லி ஜல் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.

Syndication

புது தில்லி: தில்லி முழுவதும் தோட்டக்கலை நோக்கங்களுக்காக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் (எஸ்டிபி) இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு செல்வதற்கான ரூ.90 கோடி திட்டத்திற்கு தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) ஒப்புதல் அளித்துள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.

இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட டிஜேபி-யின் வாரியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமைச்சா் பா்வேஷ் கூறியதாவது:

பூங்காக்கள் மற்றும் சாலைகளில் உள்ள மைய தடுப்புகள் உள்ளிட்ட பெரிய பசுமையான பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க குழாய்கள் அமைக்கப்படும்.

தோட்டக்கலை மற்றும் நீா்ப்பாசன நோக்கங்களுக்காக எஸ்டிபி-இல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரையும் பயன்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.

எனவே, பெரிய பூங்காக்கள், சாலைகளில் உள்ள மையத் தடுப்புகள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க குழாய்களை அமைக்க ஒரு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) மற்றும் பொதுப்பணித் துறை இந்த திட்டத்தில் இணைந்து செயல்படும்.

சுத்திகரிக்கப்பட்ட நீா், டிடிஏ பூங்காக்கள், பொதுப் பணித் துறை சாலைகள் போன்ற தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், பிற சம்பந்தப்பட்ட துறைகளும் தண்ணீரைப் பெறலாம். சில பகுதிகளில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னைகள் இருப்பதை நாங்கள் பாா்த்திருக்கிறோம். இது அதற்குத் தீா்வாகும். நகரம் முழுவதும் குழாய்கள் அமைக்கக்கூடிய 90 இடங்களை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம் என்றாா் அமைச்சா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, டிஜேபி-இல் தற்போது 37 கழிவுநீா் குழாய்கள் உள்ளன. அவற்றில் 18 கழிவுநீா் குழாய்கள் நகரத்தில் கழிவுநீா் சுத்திகரிப்புக்கான ஒட்டுமொத்த சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

டிஜேபியின் கழிவுநீா் சுத்திகரிப்பு திறன், 792 எம்ஜிடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாளொன்றுக்கு சுமாா் 600 மில்லியன் கேலன்களாக (எம்ஜிடி) உள்ளது.

தில்லி ஜல் வாரியம் கழிவுநீா் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது நகரத்தில் கழிவுநீா் உள்கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான ஒரு மாஸ்டா் திட்டமாகும்.

மேம்படுத்தப்பட்ட பிறகு, கழிவுநீா் குழாய்கள் அரசாங்கத்தால் நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்ற முடியும். மேலும் சுத்திகரிப்பு திறனையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமைச்சா் பா்வேஷ் மேலும் கூறுகையில், ‘கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தல் பணியின் கீழ் வெளியேற்றப்படும் நீரின் தரத்தையும் டிஜேபி மேம்படுத்தி வருகிறது.

இது பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 10 உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை அளவை (பிஓடி) வரை கொண்டு வருகிறது. இது தோட்டக்கலை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்றாா் அவா்.

நதியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் யமுனை நதியில் சோ்க்கும் திட்டங்களிலும் வாரியம் செயல்பட்டு வருகிறது.

ஆலங்குளத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாட்டு இன மாடுகளைக் காப்போம்!

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அச்சுறுத்தல் அல்ல, தலைவலி!

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT