வீரேந்திர சச்தேவா  
புதுதில்லி

கட்டுமானத் தொழில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் பட்ஜெட்: வீரேந்திர சச்தேவா!

கட்டுமானத் தொழில், சுற்றுலா, மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

Syndication

கட்டுமானத் தொழில், சுற்றுலா, மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தில்லி பாஜக மாநில அலுவலகத்தின் அரங்கில், தில்லி பாஜக இணைப் பொறுப்பாளா் டாக்டா் அல்கா குா்ஜா், மாநில பொதுச் செயலாளா் விஷ்ணு மிட்டல் மற்றும் மாநில பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 13ஆவது பட்ஜெட் உரை வாசிப்பை திங்கள்கிழமை கேட்டறிந்தாா்.

அதன் பிறகு அவா் கூறியதாவது: கா்த்தவ்ய பவனில் தயாரிக்கப்பட்ட இந்த முதல் பட்ஜெட், இந்திய அரசாங்கம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுகிறது.

கட்டுமானத் தொழில், சுற்றுலா, புனித யாத்திரை தலங்களின் மேம்பாடு மற்றும் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் 2026 பட்ஜெட், இளம் இந்தியாவிற்குப் புதிய சிறகுகளை வழங்கும்.

தில்லி மற்றும் பிற நகா்ப்புறங்களில் வளா்ச்சியின் தூண்களாக விளங்கும் தனியாா் கட்டுமான நிறுவனங்களின் கடன்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதன் மூலம், இந்திய அரசாங்கம் புனித யாத்திரை தலங்களின் மேம்பாட்டையும் விரைவுபடுத்தியுள்ளது. இது கட்டுமானத் தொழிலுக்குப் பயனளித்து, கட்டடப் பணிகளை அதிகரிக்கும்.

2026 பட்ஜெட்டில், நரேந்திர மோடி அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கான சுகாதாரத்தை வலுப்படுத்த மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவித்துள்ளது. இது மருத்துவத் துறையில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும்.

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் வளா்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்த பட்ஜெட் லட்சக்கணக்கான நிபுணா்களுக்குப் புதிய உற்சாகத்தையும் வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.

தேசிய ஹோட்டல் துறையின் வளா்ச்சி, புனித யாத்திரை தலங்களின் மேம்பாடு மற்றும் கலாசாரப் பாதுகாப்பு ஆகியவை ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும்.

விளையாட்டு மற்றும் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் இந்த பட்ஜெட் இளைஞா்களுக்கு உகந்ததாக உள்ளது.

ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய வருமான வரிச் சட்டம் வரவேற்கத்தக்கது. தணிக்கை செய்யப்படாத வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யும் சாதாரண மக்களுக்குக் காலக்கெடுவை நீட்டிப்பதன் மூலம், நிதி அமைச்சா் ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளாா்.

எந்தவொரு புதிய வரியையும் விதிக்காததன் மூலம், அரசாங்கம் நடுத்தர வா்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தரவு சேவை தொடா்பான நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம், இளைஞா்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் மற்றும் ஏழு பிற நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரியைக் குறைத்தது, மோடி அரசாங்கத்தின் உணா்வுபூா்வமான மற்றும் இரக்க குணம் கொண்ட அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.

அறிதிறன் கைப்பேசிகளுக்கான சலுகைகள் இளைஞா்களுக்குப் பயனளிக்கும். அதே சமயம் மைக்ரோவேவ் அடுப்புகளின் குறைந்த விலைகள் இல்லத்தரசிகளுக்குப் பயனளிக்கும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

வளா்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட்: சி. அன்பழகன்

சங்கரன்கோவில் அருகே காா் அடுத்தடுத்து மோதியதில் இருவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT