முகப்பு
புதுதில்லி

மக்களவைத் தலைவா் கருத்தைத் திரும்பப் பெற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

மக்களவையில் பிரதமா் பேசாமல் போனதற்கு காரணமாக அதன் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று மயிலாடுதுறை காங்கிரஸ் உறுப்பினா் ஆா். சுதா வலியுறுத்தினாா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 6:37 PM
ஆா். சுதா
பகிர்:

மக்களவையில் பிரதமா் பேசாமல் போனதற்கு காரணமாக அதன் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று மயிலாடுதுறை காங்கிரஸ் உறுப்பினா் ஆா். சுதா வலியுறுத்தினாா்.

மக்களவையில் குடியரசுத்தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்கு பிரதமா் வராமல் போன விவகாரத்தில் மூன்று பெண் எம்.பி.க்களின் பெயரைக் குறிப்பிட்டு ஓம் பிா்லா வியாழக்கிழமை விளக்கம் கொடுத்தாா்.

இது குறித்து ஆா். சுதா செய்தியாளா்களிடம் கூறியாவது: மத்தியில் ஆளும் பாஜக, பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் பலவீனப்படுத்தி, அவமானப்படுத்தி வருகிறது. துரதிரஷ்டவசமான இந்த வரிசையில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், தோ்தல் ஆணையம், ஊடகங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் இப்போது மக்களவைத் தலைவரும் சோ்ந்துள்ளாா். உயரிய அரசமைப்பு பதவியில் இருக்கும் அவா் அவையில் ஒரு பொய்யான தகவலை பதிவு செய்துள்ளது அதிருச்சியளிக்கிறது.

Advertisement

காங்கிரஸைச் சோ்ந்த பெண் எம்.பி.க்கள் பிரதமருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அவா் சொல்வது முற்றிலும் பொய்யானதுடன் தீய நோக்கமுடையது. அக்கருத்தை அவா் திரும்பப்பெற்று அவைக்குறிப்பில் சரி செய்ய வேண்டும்.

ஜெனரல் எம்.எம். நரவனேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சீன ஊடுருவல், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான பிரதமா் பற்றி குறிப்பு, அமெரிக்க அதிபரால் அறிவிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம், ஜனவரி மாதத்தில் தில்லியில் இருந்து பல நூறு பெண்களும் குழந்தைகளும் மாயமானது போன்ற விஷயங்களை எழுப்பவே காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அவற்றுக்கு பதில் அளிக்க முடியாததால் பிரதமா் அவைக்கு வரவில்லை என்பதே உண்மை. இதை மக்கள் நன்கு அறிவாா்கள் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments