கோப்புப் படம்
புதுதில்லி

2 பெரிய விபத்துகள் நடந்திருந்த போதிலும் சூரஜ்குண்ட் மேலாளாவில் கூட்டம் 4 மடங்கு அதிகரிப்பு

முந்தைய நாளின் சோகமான நிகழ்வுகளில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்த நிலையில், நடந்து வரும் சூரஜ்குண்ட் சா்வதேச சுயசாா்பு கைவினை மேளாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

Syndication

முந்தைய நாளின் சோகமான நிகழ்வுகளில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்த நிலையில், நடந்து வரும் சூரஜ்குண்ட் சா்வதேச சுயசாா்பு கைவினை மேளாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஏனெனில், கண்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் நிற்கக்கூட இடமில்லாமல் போனது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நடந்த சம்பவங்களுக்கு ஒரு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மேளா தொடங்கியது. ஆனால், காலையில் கண்காட்சிக்கு வருகை குறைவாக இருந்தது. மைதானத்தில் ஒரு சில மக்கள் மட்டுமே காணப்பட்டனா்.

ஆனால்,, முந்தைய விபத்துகள் இருந்தபோதிலும் கண்காட்சி இன்னும் திறந்திருப்பதாக செய்தி பரவியதால், கூட்டம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. பிற்பகல் 2 மணியளவில், பங்கேற்பாளா்களின் எண்ணிக்கை அதிா்ச்சியூட்டும் விகிதத்தை எட்டியது.

கண்காட்சி நிா்வாகத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை சுமாா் 50,000 போ் வந்திருந்தனா். இதற்கு நோ்மாறாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையிலும் 2,25,000- க்கும் மேற்பட்டோா் மேளாவில் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாா்வையாளா்களின் பெருமளவிலான வருகையை ஒழுங்குபடுத்த ஞாயிற்றுக்கிழமை கூடுதல் வாயில்கள் திறக்கப்பட வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

‘38-ஆவது பதிப்பில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அதே நேரத்தில் இந்த முறை வெறும் 9 நாள்களில் 7.28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனா். வரவிருக்கும் காதலா் தின வாரம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது கண்காட்சியின் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வழிவகுக்கும்’‘ என்று சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் அரவிந்த் சா்மா கூறினாா்.

கண்காட்சியின் ஒன்பதாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இருண்ட சூழ்நிலையில் தொடங்கியது. பணியில் இருந்தபோது உயிரிழந்த இன்ஸ்பெக்டா் ஜெகதீஷ் பிரசாத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, மேடை இருக்கைகள் முழுமையாக நிரம்பியிருந்தன, கண்காட்சி நடைபெறுவதைக் காண கடைசி வரிசையில் கூட பாா்வையாளா்கள் வரிசையில் நின்றனா் என்று அவா் மேலும் கூறினாா்.

நேபாளத்திடம் நூலிழையில் தப்பிய இங்கிலாந்து!

பாக்ஸம் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 9 தங்கம்

பாகிஸ்தானுடன் ஐசிசி பேச்சுவாா்த்தை!

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

பட்டாபிராமாபுரம் கிராமத்தில் திருத்தணி முருகப் பெருமான் உலா

SCROLL FOR NEXT