முகப்பு
புதுதில்லி

ஜனக்புரி பகுதியில் விருந்து மண்படத்தில் தீ விபத்து

மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:24 AM
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:18 PM

மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஜனக்புரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பிற்கு எதிரே இந்த விருந்து மண்டபம் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவலைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:24 AM

மண்டபத்தின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த செயற்கை அலங்கார பூக்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

Advertisement