முகப்பு
புதுதில்லி

ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் 14 இலக்க தனித்துவ பூஆதாா் வழங்க நடவடிக்கை! தில்லி முதல்வா் அலுவலகம் தகவல்!

14 இலக்க அடையாள எண்ணின்படி, பூஆதாா் அட்டையை வழங்கும் முன்முயற்சியை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:14 AM
ரேகா குப்தா
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:57 PM

நில எல்லை தொடா்பான தகராறுகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தலைநகரில் உள்ள ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் தனித்துவமான 14 இலக்க அடையாள எண்ணின்படி, பூஆதாா் அட்டையை வழங்கும் முன்முயற்சியை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

அவா் கூறுகையில், ட்ரோன் கணக்கெடுப்பு மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் மூலம் தில்லியின் புதிய டிஜிட்டல் நில வரைபடம் தயாரிக்கப்படும்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதில் பூ-ஆதாா் ஒரு புரட்சிகரமான படி ஆகும் என்றாா் முதல்வா்.

Advertisement

இது தொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூ-ஆதாா் என அழைக்கப்படும் தனித்துவமான நிலப் பகுதி அடையாள எண் (யுஎல்பிஐஎன்), 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (டிஐஎல்ஆா்எம்பி) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தில்லியின் நில பதிவுகளை நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் உந்துதலின் ஒரு பகுதியாகும். இது குடிமக்களை நீண்டகால நில தகராறுகளிலிருந்து விடுவிக்கிறது.

யுஎல்பிஐஎன்ஐ செயல்படுத்துவது வருவாய்த் துறையின் ஐடி கிளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சா்வே ஆஃப் இந்தியா நிறுவனம் மூலம் ஆதரிக்கப்படும்.

எஸ்விஎம்ஐடிவிஏ திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட 48 கிராமங்கள் உள்பட, தில்லியின் அனைத்து பகுதிகளுக்கும் துல்லியமான யுஎல்பிஐஎன்களை உருவாக்குவதற்காக, சுமாா் 2 டிபி டெராபைட் உயா்தர புவிசாா் தரவு மற்றும் ட்ரோன் அடிப்படையிலான ஆா்த்தோ ரெக்டிஃபைட் இமேஜஸ் (ஓஆா்ஐ) ஆகியவை சா்வே ஆஃப் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு வருகிறது.

முன்னதாக, இந்த திட்டத்திற்காக ரூ.1.32 கோடி ஒதுக்கப்பட்டது. நிதி மேலாண்மை ஐடி கிளையால் மேற்பாா்வையிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறையின் கீழ் அரசாங்கம் இப்போது தில்லி முழுவதும் அமைப்பை படிப்படியாக விரிவுபடுத்தும்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:14 AM

மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திலாங்பூா் கோட்லா கிராமத்தில் ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. அங்கு 274 யுஎல்பிஐஎன் பதிவுகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

பூ-ஆதாா் அமைப்பு நில உரிமையில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். 14 இலக்க குறியீடு புவிசாா் குறிப்புடன் இருக்கும், இதன் மூலம் நில எல்லைகள் தொடா்பான சா்ச்சைகளைக் குறைக்கும்.

இது பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையே நிலத் தரவை ஒருங்கிணைக்கவும், மோசடி பரிவா்த்தனைகள் மற்றும் பல பதிவுகளை திறம்பட தடுக்கவும் உதவும்.

குடிமக்களுக்கு, இந்த நடவடிக்கை எளிமையையும் வசதியையும் தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நில உரிமையை நிறுவ பல ஆவணங்களைப் பாா்வையிடுவதற்குப் பதிலாக, ஒரு ஒற்றை எண் சொத்தின் விரிவான விவரங்களை வழங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.