முகப்பு
புதுதில்லி

நகரில் மோசம் பிரிவில் காற்றின் தரம் அதிகபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி!

தேசிய தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:36 PM
(கோப்புப்படம்) - ANI
பகிர்:

தேசிய தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவகால சராசரியை விட 4.1 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. இது பருவகால சராசரியை விட 0.1 டிகிரி அதிகமாகும்.

திங்கள்கிழமை மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 28 டிகிரி செல்சியஸ் மற்றும் 12 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நகரில் காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணிக்கு 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 45 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

நகரில் மாலை 4 மணிக்கு காற்றின் தரம் மோசமான பிரிவில் பதிவாகி இருந்தது. காற்று தரக் குறியீடு 216 ஆக பதிவாகியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவு தெரிவித்தது.

Advertisement

சிபிசிபியின் கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்டதாக இருந்தால் காற்றின் தரம் நல்லது, 51 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரமானது, 101 முதல் 200 வரை இருந்தால் மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் மோசம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமானது, 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையானது என்று கருதப்படுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments