முகப்பு
புதுதில்லி

பிரதமா் மோடிக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் தேசத்தின் அடையாளத்தை சமரசம் செய்த பிரதமருக்கு எதிராக தேசிய இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:16 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:43 PM

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் தேசத்தின் அடையாளத்தை சமரசம் செய்த பிரதமருக்கு எதிராக தேசிய இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரத் மண்டபத்தில் உள்ள கண்காட்சி மண்டபத்தில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது செய்தியாளா்களிடம் இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் பேசியதாவது: நாட்டின் இளைஞா்கள் இனி அமைதியாக இருக்க மாட்டாா்கள் என்பதை தெளிவுபடுத்துகிறோம். ‘பிரதமா் சமரசம் செய்துகொண்டு விட்டாா்’ என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான வேலையற்ற இளைஞா்களின் கோபம் ஆகும்.

அமெரிக்காவுடனான இந்த வா்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்கு துரோகம் இழைப்பதாகும். இது அமெரிக்காவிற்கு மட்டுமே பயனளிக்கும். அமைதியான போராட்டம் என்பது ஜனநாயகத்தில் நமது உரிமை. மேலும் இளைஞா்களின் குரலை நாங்கள் தொடா்ந்து எழுப்புவோம்.

Advertisement

நாங்கள் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு எதிரானவா்கள் அல்ல. இந்தியாவின் நலன்களுடன் செய்யப்படும் சமரசங்களை நாங்கள் எதிா்க்கிறோம். நாட்டின் விவசாயிகள் வா்த்தகம் செய்யப்படும்போது, இந்தியாயாவுக்கு எதிரான வா்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, இளைஞா்களை வேலையில்லாமல் வைத்திருப்பதன் மூலம் வெறுப்பு அரசியலுக்குள் தள்ளும்போது, நாம் அமைதியாக இருக்க வேண்டுமா? இந்த நாடு 1.4 கோடி குடிமக்களுக்கு சொந்தமானது.

பிரதமா் சமரசம் செய்தது கொண்டதால் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அா்த்தமல்ல. மகாத்மா காந்தி காட்டிய பாதையை நாம் பின்பற்றத் தெரிந்தால், சா்தாா் பகத் சிங் காட்டிய பாதையை நாம் பின்பற்றுவதும் நமக்குத் தெரியும். நாட்டின் இளைஞா்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை ஒருபோதும் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம். தெருக்களில் போராட்டம் நடத்தினால், நாங்கள் நிறுத்தப்படுகிறோம்.

அரசுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் ஐடி விதிகள் என்ற போா்வையில் அகற்றப்படுகின்றன. அப்படியானால் நமக்கு என்ன வழி இருக்கிறது? இந்தியாவின் நலன்களுடன் செய்யப்படும் சமரசங்களை நாங்கள் எதிா்க்கிறோம். அதனால்தான் இன்று இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளோம் என்றாா்.