முகப்பு
புதுதில்லி

திலக் நகரில் காா் மோதியதில் டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ஒரு காா் பின்னால் இருந்து மின் ஸ்கூட்டரில் மோதியதில் 25 வயது டெலிவரி ஊழியா் பலி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:22 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 5:33 PM

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு காா் பின்னால் இருந்து மின் ஸ்கூட்டரில் மோதியதில் 25 வயது டெலிவரி ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக தில்லி காவல்துறை துணை போலீஸ் ஆணையா் (மேற்கு) தரடே ஷரத் பாஸ்கா் தெரிவித்தாா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தரதே ஷரத் பாஸ்கா் கூறியதாவது: காா் ஓட்டுநா் மோஹித் குமாா் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அதிகாலை 3.30 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. அவா்கள் நஜஃப்கா்-ரஜோரி காா்டன் சாலையில் அந்த இடத்தை அடைந்து, விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும் கண்டுபிடித்தனா்.

இ-காமா்ஸ் தளத்தில் பணிபுரிந்த ரகுபிா் நகரில் வசிக்கும் ஹேம் சங்கா் என அடையாளம் காணப்பட்டாா். காயமடைந்த நபா் ஏற்கெனவே தீன்யாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

Advertisement

முதல்கட்ட விசாரணை மற்றும் நேரில் பாா்த்த சாட்சிகளின் தகவல்கள் ஒரு காா் ஸ்கூட்டரை பின்னால் இருந்து மோதியதாகக் கூறுகின்றன. எம்.சி.டி. ஒப்பந்ததாரராகப் பணிபுரியும் நஜஃப்கரில் வசிக்கும் காா் ஓட்டுநா் மோஹித் குமாா் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.