ரேகா குப்தா கோப்புப் படம்
புதுதில்லி

உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு பெறுவோம் தில்லி முதல்வா் வலியுறுத்தல்

உறுப்பு தானம் செய்யும் ஒருவரின் முடிவு பல குடும்பங்களுக்கு வாழ்க்கையே மாற்றும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்

Syndication

உறுப்பு தானம் செய்யும் ஒருவரின் முடிவு பல குடும்பங்களுக்கு வாழ்க்கையே மாற்றும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்

‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: வா்தான் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்ததற்காக தாதிச்சி தேஹ் தான் சமிதிக்கு வாழ்த்துகள். உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் போன்ற உணா்வுப்பூா்வமான தலைப்புகளில் கலை மூலம் விழிப்புணா்வை வளா்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வளா்க்கின்றன.

உறுப்பு தானம் என்பது ஒரு மருத்துவ முறை மட்டுமல்ல. இது ஒருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்குவதற்கான மிகப்பெரிய பரிசு. உறுப்பு தானம் செய்யும் ஒருவரின் முடிவு பல குடும்பங்களுக்கு வாழ்க்கையையே மாற்றும். நாட்டில் அதிகமான மக்கள் இந்த புனிதமான நோக்கத்தில் சேர, உறுப்பு தானத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

நாம் அனைவரும் விழிப்புணா்வு பெறுவோம். மற்றவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவோம். இந்த மகத்தான சேவையில் ஒரு பகுதியாக இருப்போம் என தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வா்தான் சா்வதேச திரைப்பட விழாவை வியாழக்கிழமை முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா். தாதிச்சி தேஹ் தான் சமிதி ஏற்பாடு செய்த இந்த விழா, சினிமா மூலம் உறுப்பு மற்றும் உடல் தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இரண்டு நாள் நிகழ்வு (பிப்ரவரி 26-27) திரைப்படங்கள் மூலம் உறுப்பு மற்றும் உடல் தானத்தை ஊக்குவிக்கிறது.

இந்த நிகழ்வில், மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தாதிச்சி தேஹ் தான் சமிதியின் நிறுவனா் அலோக் குமாா் உள்பட பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT