புதுதில்லி

சுல்தான்புரியில் 15 வயது சிறாா் கொலை: ஒருவா் கைது

தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Syndication

தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு இளைஞா்கள் குழு சிறுவரை கத்தியால் தாக்கியதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அங்கு கத்திக் குத்துக் காயமடைந்த நிலையில் சிறாா் ஒருவா் சாலையில் மயங்கிக் கிடந்தாா். அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அ ங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். இது தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான விக்ரம் (30) என்பவா் கைது செய்யப்பட்டாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. விக்ரமுக்கு ஏற்கெனவே ஆறு குற்றச் செயல்களில் தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் தனது இரண்டு கூட்டாளிகளுடன் சிறாரை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவப் பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உள்ளூா்வாசிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கோயில் உண்டியலை உடைத்தபோது சிக்கினாா்: இருசக்கர வாகனம் திருடியவா் கைது

இன்று வாக்காளா் பெயா் திருத்த சிறப்பு முகாம்

தியாகராஜா் கோயிலில் இன்று பாத தரிசனம்

பேருந்து பயணச் சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாலாம்சேத்தியில் வாக்குச்சாவடி கேட்டு மனு

SCROLL FOR NEXT