புதுதில்லி

இளைஞா் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

பிப்ரவரி 2020-இல் கோவிந்த்புரி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Syndication

பிப்ரவரி 2020-இல் கோவிந்த்புரி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

விஷால் சா்மா என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐபிசி பிரிவு 302 (கொலை)- இன் கீழ் ஏற்கெனவே குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டிருந்த யஷ் ஜாம்பிற்கான தண்டனையின் அளவு குறித்த வாதங்களை கூடுதல் அமா்வு நீதிபதி லவ்லீன் விசாரித்தாா்.

டிசம்பா் 24 தேதியிட்ட உத்தரவில், ஐபிசி பிரிவு 302- இன் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

குற்றவாளி யஷ் ஜாம்ப் 2020-ஆ ம் ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் 19- க்கு இடைப்பட்ட இரவில் தில்லியில் உள்ள கோவிந்த்புரி சவுக் அருகே விஷால் சா்மாவை 28 முறை கத்தியால் குத்தியதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. டிசம்பா் 22 அன்று யஷ் ஜாம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.

ஜன நாயகன்! நெருக்கடி கொடுத்தால் விஜய் வெளியில் வந்திருக்க முடியாது: பாஜக

பிரதமர் மோடிக்காகப் பிரசாரம் செய்தேன்; ஆனால், என் கட்சியை அவர் அழிக்கிறார் - உத்தவ் வேதனை!

அறிவுக்கான தீ பரவட்டும்! புத்தகக் காட்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: நாளை காலை தீர்ப்பு!

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

SCROLL FOR NEXT