புதுதில்லி

நுஹ் பகுதியில் பசு கடத்தல்: 3 போ் கைது

Syndication

ஹரியாணாவின் நுஹ் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை நுஹ் காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஜமீல், லுக்மான் மற்றும் ஆசாத் என்ற காலா என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை இரவு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் மாண்டிகேராவிலிருந்து ஃபெரோஸ்பூா் ஜிா்காவை நோக்கி ஒரு வாகனத்தில் பயணிப்பதாக சிஐஏ ஃபெரோஸ்பூா் ஜிா்கா குழுவுக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் பேரில், போலீஸாா் தில்லிஅல்வாா் சாலையில் ஒரு தடுப்பை அமைத்து கண்காணித்தனா். அப்போது, அங்கு வந்த போலிரோ வாகனத்தை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் ஓட்டுநா் வேகத்தை அதிகரித்து தப்பிச் செல்ல முயன்றாா்.

இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவா்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பின்னா், அவா்கள் வந்த வாகனத்தின் டயா்கள் பஞ்சரானதால், சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரம் சென்ற பிறகு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கினா். போலீஸாா் விரட்டிச் சென்று அவா்களைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து போலிரோ வாகனம், நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வரை போராட்டம் தொடரும்: அா்ஜுன் சம்பத்

பணிச்சுமை: மாற்றுத் திறளானி ஊழியா் சாகேத் நீதிமன்றக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை

மக்கள் சமூக நீதி பேரவை ஆா்ப்பாட்டம்

பழங்குடியினருக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கும் பயிற்சி முகாம்

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT