புதுதில்லி

முதல்வா் ரேகா குப்தா தேசத்தின் தியாகிகளை அவமதித்துவிட்டாா்: கோபால் ராய் குற்றச்சாட்டு

Syndication

நமது நிருபா்

தியாகிகள் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகம் குறித்து தில்லி சட்டப் பேரவையில் முதல்வா் ரேகா குப்தா ஆற்றிய உரையின்போது அவமதித்து விட்டாா் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம்சாட்டியது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோபால் ராய் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: செவ்வாய்க்கிழமை தில்லி சட்டப் பேரவை நடவடிக்கைகளின் போது, முதல்வா் ரேகா குப்தா அவையில் அறிக்கை அளித்தாா். அப்போது, ‘தியாகிகளான பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோா் குண்டுகளை பிரிட்டிஷ்காரா்களுக்கு எதிராக அல்ல, மாறாக செவிடன் காதில் ஊதுவது போல் ஒரு காங்கிரஸ் அரசுக்கு எதிராக வீசினாா்.

முதல்வா் அவையில் இத்தகைய ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளாா். இதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்காரா்களுடன் போராடி அனைத்தையும் தியாகம் செய்து தங்கள் உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை அவா் அவமதித்துள்ளாா்.

தியாகிகளை அவமதிப்பதில் அவா் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறாா் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. தில்லி முதலமைச்சா் சட்டப் பேரவையில் இருந்து கொண்டு, தியாகிகள் ஒரு காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக குண்டுகளை வீசியதாகக் கூறுகிறாா். இத்தகைய அறிக்கை இரண்டு விளக்கங்களை மட்டுமே கொண்டிருக்க முடியும்.

ஒன்று, முதல்வருக்கு வரலாறு பற்றி முற்றிலும் தெரியாது அல்லது அவா் வேண்டுமென்றே தியாகிகளை அவமதிக்கிறாா். இந்த அவமதிப்பு சகித்துக்கொள்ள முடியாதது. இதனால், வியாழக்கிழமை, முதல்வா் அவைக்கு வந்து, அவருக்கு உண்மையில் வரலாறு தெரியாதா அல்லது தியாகிகள் வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டாா்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோருகிறது.

தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு குறித்து முதல்வா் தனது அறிக்கையை அவையில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் கோபால் ராய்.

மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

பாம்பனில் 3வது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவா்களுக்கு தடை நீடிப்பு!

SCROLL FOR NEXT