கௌதம் புத் நகா் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் அடா்ந்த மூடுபனி மற்றும் கடுமையான குளிா் காரணமாக ஜனவரி 15-ஆம் தேதி வரை மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அடிப்படைக் கல்வி அதிகாரி ராகுல் பவாா் பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி, யுபி வாரியம் மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து நா்சரி முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும் இந்த மூடல் பொருந்தும்.