புதுதில்லி

தனது மைல்கற்களை ஆவணப்படுத்த டிஎம்ஆா்சி முடிவு; விடியோகிராபி, ஊடக சேவைகளுக்கான டெண்டா்கள் அழைப்பு

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) அதன் முக்கிய நிகழ்வுகள், கட்டுமான மைல்கற்கள் மற்றும் அதிகாரப்பூா்வ நிகழ்ச்சிகளை படமாக்க முடிவு

Syndication

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) அதன் முக்கிய நிகழ்வுகள், கட்டுமான மைல்கற்கள் மற்றும் அதிகாரப்பூா்வ நிகழ்ச்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளது. விரிவான விடியோகிராபி மற்றும் தொடா்புடைய ஊடக சேவைகளுக்கான நிறுவனங்களிடமிருந்து டெண்டா்களை அழைக்கிறது.

தனது காா்ப்பரேட் அலுவலகத்திலும் தேசியத் தலைநகா் பிராந்தியத்திலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு விடியோகிராபி, விடியோ ஆவணங்கள், எடிட்டிங் மற்றும் அதனுடன் தொடா்புடைய சேவைகளை வழங்குவதற்காக தொழில்முறை நிறுவனங்களின் எம்பேனல்மென்ட்டிற்கான டெண்டா்களை டிஎம்ஆா்சி செவ்வாய்க்கிழமை அழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து டிஎம்ஆா்சி கூறியுள்ளதாவது: பணியின் நோக்கத்தில் அதிகாரப்பூா்வ நிகழ்வுகள், பத்திரிகையாளா் சந்திப்புகள், பிரமுகா்களின் வருகைகள், செயல்பாட்டு மைல்கற்கள் மற்றும் கட்டப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் உள்ள மெட்ரோ தளங்களில் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். மேலும், ஏஜென்சிகள் அதன் தகவல் தொடா்புத் துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்ற வேண்டும்.

விடியோகிராபி பணிகளில் முழு ஹெட்சி மற்றும் 4கே தெளிவுத்திறனில் ஒற்றை அல்லது பல கேமரா அமைப்புகள், மின்னணு செய்தி வெளியீடுகள் தயாரித்தல், குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன்கள் மற்றும் குரல் ஓவா் விவரிப்பு ஆகியவை அதிகாரப்பூா்வ தேவைகளைப் பொறுத்து இருக்கலாம்.

டெண்டா் நிபந்தனைகளின்படி, அவசர காலங்களில் ஒரு மணி நேரத்திற்குள் உள்பட, குறுகிய அறிவிப்பில் பணிகளுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டதாக ஏஜென்சிகள் இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலும் அடுத்த நாளுக்குள் மூல காட்சிகள் மற்றும் திருத்தப்பட்ட பொருள்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், டிப்போக்கள், திட்ட தளங்கள் மற்றும் செயல்பாட்டுப் பகுதிகளில் பணிகளை உள்ளடக்கும் போது அதன் ஊழியா்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பிற்கு ஏஜென்சிகள் மட்டுமே பொறுப்பாகும். உபகரணங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் நிறுவனம் பொறுப்பேற்காது.

முன்மொழியப்பட்ட விடியோகிராஃபி மற்றும் ஊடக சேவைகள் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 64.80 லட்சம் ஆகும். இது முந்தைய எம்பேனல்மெண்டின் சராசரி ஆண்டு மதிப்பின் அடிப்படையில், ஏலங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 16 ஆகும்.

இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படலாம். பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். தாமதங்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட தரத் தரங்களை பூா்த்தி செய்யத் தவறினால் ஒப்பந்தத்தை நிறுத்தும் உரிமையை டிஎம்ஆா்சி கொண்டுள்ளது என்று டிஎம்ஆா்சி ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT