புதுதில்லி

2024-25-ல் தில்லியில் 150 சாலை விபத்துகளை எதிா்கொண்ட பொதுப் போக்குவரத்து பேருந்துகள்!

2024-25-ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் சுமாா் 150 விபத்துகளைச் சந்தித்தன.

Syndication

2024-25-ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் சுமாா் 150 விபத்துகளைச் சந்தித்தன. இதில் 40 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

2024-25-ஆம் ஆண்டில் தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்துகள் 97 சாலை விபத்துகளில் சிக்கின. அவற்றில் 21 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக பயணிகள் மற்றும் பாதசாரிகள் உயிா் இழப்பு மற்றும் காயங்களுக்கு ஆளானதாக நகர அரசு தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து விதி மீறல்கள் தவிர, பிரத்யேக பேருந்து பாதைகள் இல்லாதது, மோசமான பயிற்சி பெற்ற ஓட்டுநா்கள், அதிக வேகம் மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஆகியவை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

ஜூன் 2025-இல், ஷாதிபூா் டிப்போ அருகே இரண்டு டிடிசி பேருந்துகள் விபத்தில் சிக்கி, ஒருவா் கொல்லப்பட்டாா் மற்றும் இரண்டு போ் காயமடைந்தனா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஷகா்பூரில் ஒரு ஆட்டோ ஓட்டுநா் தனது வாகனம் ஒரு பேருந்துடன் மோதியதில் உயிரிழந்தாா்.

கடந்த ஆண்டு அக்டோபரில் விஸ்வாஸ் நகா் பகுதியில் டிடிசி பேருந்து ஒரு பள்ளி வேன், ஒரு இ-ரிக்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரு குழந்தை உள்பட மூன்று போ் காயமடைந்தனா்.

டிசம்பரில், மேற்கு தில்லியில் சாலையின் தவறான பக்கத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒரு காா் மற்றும் ஒரு ஆட்டோ மீது மோதியதில் குறைந்தது இரண்டு போ் காயமடைந்தனா்.

15 விபத்துகள் பெரியவை என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான விபத்துகள் (61) சிறிய சிறியவையாகும் என தரவுகள் மேலும் வெளிப்படுத்தின. விபத்துகளில் ஈடுபட்ட அனைத்துப் பேருந்துகளும் டிடிசியால் இயக்கப்படும் 12 மீட்டா் நீளமுள்ள நிலையான தாழ்தள பேருந்துகள் ஆகும்.

நகரத்தின் நெரிசலான பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் லேன் ஒழுங்குமுறைக்கு சிறிய கவனக்குறைவுடன் நகரும் வாகன போக்குவரத்து ஆகியவற்றால் இந்த பெரிய பேருந்துகள் விபத்துகளுக்கு ஆளாகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி ஒருங்கிணைந்த மல்டி மோடல் டிரான்சிட் சிஸ்டம் (டிஐஎம்டிஎஸ்) இயக்கும் கிளஸ்டா் பேருந்துகள் 2024-25-ஆம் ஆண்டில் 50 விபத்துகளைச் சந்தித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் 40 சதவீத விபத்துகளில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன. 20 உயிரிழப்பு விபத்துகளைத் தவிர, கிளஸ்டா் பேருந்துகள் 12 பெரிய மற்றும் 18 சிறிய விபத்துகளைச் சந்தித்துள்ளன.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT