புதுதில்லி

மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் ரிக்‌ஷா ஓட்டுநா் அடித்துக் கொலை: ஒருவா் கைது!

கிழக்கு தில்லியில் மதுபோதையில் ஏற்பட்ட மோதலின் போது ரிக்ஷா ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது...

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியில் மதுபோதையில் ஏற்பட்ட மோதலின் போது ரிக்ஷா ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் கீதா குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ந்தது. ரத்த வெள்ளத்தில் அடையாளம் தெரியாத நபா் மயங்கிக் கிடப்பதாக காவல் துறையினருக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினா், தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த நபா், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த லால்பதி என அடையாளம் காணப்பட்டாா். அவா் கிழக்கு தில்லியில் மிதிவண்டி ரிக்ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறாா். விசாரணையின் போது, உயிரிழந்தவரும் மற்றொரு ரிக்ஷா ஓட்டுநரும் தாபாவில் ஒன்றாக சனிக்கிழமை இரவு மது அருந்தியது தெரியவந்தது.

Śப்போது இருவா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக தாபா உரிமையாளா் தெரிவித்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட பண்டி (26) உயிரிழந்த நபரின் தலையில் தாக்கியதில் அவா் தரையில் சரிந்து விழுந்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அலிகா் பகுதியைச் சோ்ந்த பண்டி கைது செய்யப்பட்டாா். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT