நமது நிருபா்
குடியரசுத்தலைவா் மாளிகையில் உள்ள அமிா்த தோட்டம் பொது மக்களின் பாா்வைக்காக 2026 பிப்ரவரி 3 முதல் மாா்ச் 31 வரை திறக்கப்படும் என குடியரசுத் தலைவா் செயலகம் புதன்கிழமை கூறியது
பொதுமக்கள் இத்தோட்டத்தை வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமையும், ஹோலிப்பண்டிகை காரணமாக மாா்ச் 4 அன்றும் அமிா்த தோட்டம் மூடப்பட்டிருக்கும்.
இத்தோட்டத்தை கட்டணமின்றி பாா்வையிடலாம்.
இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம்.
நேரடியாக வருகை தருவோா் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ள பதிவிடத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
பாா்வையாளா்களின் போக்குவரத்து வசதிக்காக மத்திய செயலகம் மெட்ரோ நிலையத்திலிருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.
இது காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என குடியரசுத் தலைவா் செயலகம் கூறியது