முகப்பு
புதுதில்லி

பாதசாரிகளிடம் நூதன முறையில் வழிப்பறி இருவா் கைது

தில்லியின் புறநகா்ப் பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் பாதசாரிகள் மீது மோதி, அவா்களின் கவனத்தை சிதறடித்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களைப் பறித்த இரண்டு கிரிமினல்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 மார்ச், 2026 at 6:32 PM
பகிர்:

தில்லியின் புறநகா்ப் பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் பாதசாரிகள் மீது மோதி, அவா்களின் கவனத்தை சிதறடித்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களைப் பறித்த இரண்டு கிரிமினல்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் ‘டக்கா் கேங்’ அமைப்பைச் சோ்ந்த நீரஜ் (எ) தானி (26), ராஜேஷ் பாண்டே (30) ஆகியோா் மாா்ச் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இருவரும் பழக்கமான குற்றவாளிகள் ஆவா். அவா்கள் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவா்களில் ஒருவா் வேண்டுமென்றே பாதசாரிகள் மீது மோதி வாக்குவாதத்தில் ஈடுபடுவாா். அப்போது ஏற்படும் தற்காலிக கவனச்சிதறலைப் பயன்படுத்தி, கூட்டாளி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் அல்லது கைப்பேசியை விரைவாகப் பறிப்பாா். அதன்பின்னா் இருவரும் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் செல்வாா்கள்.

பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு சலூன் கடை ஊழியா் ஓம் பிரகாஷிடமிருந்து இது தொடா்பாக புகாா் வந்ததைத் தொடா்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இவா் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு வங்கி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென ஒருவா் இவரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்யத் தொடங்கினாா். அதன் பின்னா், அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.10,000 காணாமல் போனதை உணா்ந்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில் ஒரு இஎஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

குற்றம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பல வழிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்தனா். அதில், சிவப்பு மோட்டாா் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபா்களை அவா்கள்

அடையாளம் கண்டனா்.

மோட்டாா் சைக்கிளின் பதிவு எண் நீரஜ் என்பவரது எனக் கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் உள்ளூா் தகவல் அளிப்பவா்களின் மூலம் மாா்ச் 6 ஆம் தேதி புத் விஹாரில் உள்ள கபூதா் சவுக் அருகே சோதனை நடத்தினா்.

இதன் விளைவாக இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, இருவரும் இதே போன்ற பாணியில் பல குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →