ஆடு ஜீவிதம் - பென்யாமின்; தமிழில்: எஸ்.ராமன்; பக்.240; ரூ.140; உயிர்மை பதிப்பகம், சென்னை. 044-24993448.
மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. இதைப் பாலைவனத்தின் அனலுடன் எழுத்துகளில் தந்திருக்கிறார் நாவலாசிரியர். பாலைவனத்தில் புற்கள் இல்லாவிட்டாலும், மணலை மட்டுமாவது முகர்ந்து பார்த்து வர ஆடுகளை அரேபியர்கள் அனுமதிக்கிறார்கள். ஆனால், ஆடுகளைப்போல மனிதர்களை விலைவைத்து விற்க முடியாது என்பதால், இந்த அளவுக்கான சிறிய சலுகைகூட கிடைக்காமல் இருவரும் படும் துயரப் பயணத்தைப் படிக்கும்போது கண்ணீர் பெருகியது. பென்யாமினே நேரடியாகப் பாதிக்கப்பட்டு எழுதியது போன்று உயிர்ப்புத் தன்மையோடு இருக்கிறது. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்றது இந்நாவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.