முகப்பு
நூல் அரங்கம்

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு-பா.ராகவன்; பக்.159; ரூ.80; கிழக்கு பதிப்பகம், சென்னை-18; )044-42009601/03/04. மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஆட்சியாள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:03 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:58 PM

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு-பா.ராகவன்; பக்.159; ரூ.80; கிழக்கு பதிப்பகம், சென்னை-18; )044-42009601/03/04.

மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்ததன் பின்னணியை சுவையாகக் கூறும் நூல். டுனீஷியாவில் ஒரு நடைபாதை வியாபாரியின் குரல் எப்படி அதிபரை வீட்டுக்கு அனுப்பும் அளவுக்குப் பிரமாண்டமான புரட்சியாக உருமாறியது என்பதை ஒரு திரைக்கதைபோல உயிரோட்டமாகவும், எளிய நடையிலும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். சரளமான நடை வெளிநாட்டு சம்பவங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இப்போதும் தொடரும் நிகழ்வுகள் என்பதும் சிறப்பு. எகிப்து, யேமன், பஹ்ரைன், லிபியா, சவூதி அரேபியா, ஜோர்டான் என என மக்கள் கிளர்ச்சி நடக்கும் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, போராட்டத்தில் இணையத்தின் பங்கு, அமெரிக்காவின் ஆசை, உலக நாடுகளின் ஆர்வம், எண்ணெய் வளம் உள்பட சகலமும் விவரிக்கப்பட்டுள்ளது. புரட்சி நடக்கும் நாடுகளையும் எழுச்சியின் நிலையையும் ஒரே பக்கத்தில் பட்டியிலிட்டிருப்பது பிரச்னையை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்கால உலக அரசியல் போக்கைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். எல்லா நாடுகளிலும் அமைதியான வழியில் புரட்சி தொடங்கியது என்று பொதுமைப்படுத்தியிருப்பது, சூடானையும் கிளர்ச்சி நடக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருப்பது ஆகியவற்றைத் தவிர்த்து வேறெந்தக் குறையும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.