பூமியை பாதுகாப்போம்-நடாலியா மார்ஷல்; தமிழில்: கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ்; பக்.240; விகடன் பிரசுரம், சென்னை-2.
புவி வெப்பமயமாகிறது, ஓசோன் படலத்தில் ஓட்டை என்பது மட்டுமே நமக்குத் தெரிந்த சூழல் சார்ந்த பிரச்னை. அதற்கு மரம் நட்டு வளர்ப்பது மட்டுமே புவியைக் காக்க ஒரே வழி என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, வாழ்வியல் முறைகளை மாற்றி, சுக போகங்களை கொஞ்சம் தியாகம் செய்தால், நம் வாழ்வு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி வாழும் எல்லா உயிரினங்களையும் அழிவிலிருந்து காக்க 52 யோசனைகளையும், அது குறித்த ஒவ்வொரு அத்தியாயத்திலும் சந்தேகப் பெட்டி, யோசனை மூலை, அப்படியா! போன்ற விவரங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாம் வைத்திருக்கக் கூடாத கார்பன் தூசுகளிலிருந்து விடுபடும் எளிய முறைகள், குப்பைத் தொட்டியில் இருந்து செய்யக்கூடிய மறுசுழற்சி முறைகள், விஷத்தன்மை இல்லாமல் வீட்டை அலங்கரிப்பது, சிறு பூச்சிகளைக் கொல்வதால் சிறு பறவைகளின் அழிவுக்கு வழிவகுக்கிறோம், நுகர்வோர் கவனிக்க வேண்டிய லேபிள், பொருள்கள் வீணாகாமல் வீட்டில் உலர் உணவுப் பொருள்கள் தயாரித்து பணம் மிச்சம் பிடித்தல், வேதிப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களால் ஏற்படும் ஆபத்து, உடல் நலத்தைப் பாதுகாக்கும் இயற்கை முதலுதவி, கணினிக்கும் பசுமை அழிவுக்கும் உள்ள தொடர்புகள், மரபுசாரா எரிசக்தி எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் பல விவரங்கள், நாம் அனைவரும் கண்டிப்பாகத் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். நாம் வாழ்ந்தால் போதும், நம் பிள்ளைகள், அதற்கு அடுத்த தலைமுறை எப்படிப்போனால் என்ன என்கிற வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை நிச்சயமாக ஒவ்வொரு வாசகரின் மனதிலும் விதைக்கிறது. பூமியைப் பாதுகாக்க இன்றைய சூழலில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.