நூல் அரங்கம்

சின்ன அரயத்தி- நாராயண்

சின்ன அரயத்தி- நாராயண்; தமிழில்: குளச்சல் மு.யூசுப்; பக்.277; ரூ.200; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-1; )04562-278525. கேரளத்துப் பூர்வகுடியான மலை அரயன்களின் வாழ்வியலைச் சின்ன அரயத்தி என்ற நாவலாக,

தங்க.சங்கரபாண்டியன்

சின்ன அரயத்தி- நாராயண்; தமிழில்: குளச்சல் மு.யூசுப்; பக்.277; ரூ.200; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-1; )04562-278525.

கேரளத்துப் பூர்வகுடியான மலை அரயன்களின் வாழ்வியலைச் சின்ன அரயத்தி என்ற நாவலாக, அதே சமூகத்தைச் சேர்ந்தவர் எழுதியுள்ளார். அடிமை சமூகங்களின் அழுகுரல் அடிவயிற்றைத் தாண்டாது. வேதனையை இவர்கள் கண்களில் நீர் கசியாமல் அடக்கி விடுவர். இந்த மக்களின் மனதில் உள்ள ஆழ்கடல் நீரோட்டத்தில் எழுந்திடும் பூகம்பத்தை வெளிக்கொண்டு வந்துள்ள நாவல் சின்ன அரயத்தி.

பழங்குடியினரிடம் பெண் அடிமைத்தனம் கிடையாது என்ற வாதம் நாவலின் தொடக்கத்திலேயே உடைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களான அரயன்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் மூலம் என்ன, சொந்த மண் எது? என்பன போன்ற இன வரலாற்றைக் கதை ஓட்டத்தில் சொல்லியிருப்பது சிறப்பு. ஆட்சியாளர்களால் பழங்குடியின மக்கள் சுரண்டலுக்கு ஆளானதை ஆழமாகச் சித்திரித்துள்ளார். சமூகத் தொடர்புகள் வந்தாலும், மலைவாழ் மக்களுக்கு உரித்தான பண்புகள் மாறாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கதையின் நாயகன் கொச்சுராமன், அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து, மருத்துவமனையை விட்டு ஓடுவதில் கதை முடிந்துள்ள விதம் அருமை. கதைகள் வரலாறு ஆவதில்லை; ஆனால், வரலாறு கதையாகும்போதுதான் சமூக வெளிப்பாடு தெரியும் என்பார்கள். மலைவாழ் மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள "சின்ன அரயத்தி' உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT