நூல் அரங்கம்

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - தமிழருவி மணியன்; பக்.128; ரூ.45; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசைகளின்றி வெற்றிடமாகப் பிறக்கும் மனிதனின் மனதில் "ஆசை

தங்க.சங்கரபாண்டியன்

மனமும் மனிதனும் - தமிழருவி மணியன்; பக்.128; ரூ.45; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசைகளின்றி வெற்றிடமாகப் பிறக்கும் மனிதனின் மனதில் "ஆசை' என்ற மிருகம் குடியேறி விடுகிறது. அகோரப் பசி கொண்ட அந்த மிருகம், மனிதன் இருக்கும் வரையிலும், இறக்கும் வரையிலும் அவனை விடுவதாக இல்லை. அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மனிதனை அடக்கும் ஓர் அங்குசமாகவே வெளி வந்திருக்கிறது தமிழருவி மணியனின் இந்தப் புத்தகம்.

எது தற்போதைய தேவையோ அது இப்புத்தத்தில் விரவிக் கிடக்கிறது. வாழ்வு பற்றி தனக்குள் எழுந்த சிந்தனைகளை மிக விரிவாக விளக்கியிருக்கிறார். வாழ்வியல் தத்துவங்களை உரசி தீப்பொறி ஏற்படுத்தி உங்களுக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

அன்பு, பாசம், மனிதம், நட்பு, காதல், சமூகம் என்று வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் இந்தப் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

"மனதை மாற்றும் மந்திரச் சாவி' இந்த மனமும், மனிதனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT