நூல் அரங்கம்

தொல்லியல் புதையல்

தொல்லியல் புதையல் - நடன.காசிநாதன்; பக்.160; ரூ.120; திருக்குறள் பதிப்பகம், சென்னை-78; )044-6538 3000.

நடன.காசிநாதன்

தொல்லியல் புதையல் - நடன.காசிநாதன்; பக்.160; ரூ.120; திருக்குறள் பதிப்பகம், சென்னை-78; )044-6538 3000.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக் காலாண்டிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் வெளியான, தொல்லியல் தொடர்பான 18 கட்டுரைகளின் தொகுப்பு.

"மோத்தக்கல்' என்ற ஊரின் தென்கிழக்கில் உள்ள மூங்கில் காட்டில் கிடைத்த வட்டெழுத்து பொறிக்கப்பட்ட இரு நடுகற்கள், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைச் சேர்ந்தவை. அதாவது, இன்றைக்கு 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. இவை சோழன் பராந்தகன் காலத்தில் நிகழ்ந்த ஒரு வீரச் செயலை விவரிக்கிறது. மற்றொரு நடுகல் கீழ்முட்டுகூரில் கிடைத்தது. அடுத்து, தகடூர் மாவட்டம் நவலை என்ற ஊரில் உள்ள கிளியேரியின் ஓரத்தில் கிடைத்த நடுகற்கள். மேலும், தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் ரெட்டியூரில் கிடைத்துள்ள கல்வெட்டு கங்கமன்னன் அத்திமல்லன் காலத்தது. இத்தகைய நடுகற்களும் கல்வெட்டுகளும் மன்னர்கள் பலரது வீரத்தை, சுவாரஸ்யமான கதைப் பின்னலுடன் பதிவு செய்துள்ளது.

நுளம்பர் கால நடுகற்களிலிருந்து அய்யப்பதேவன் யார் என்னும் கேள்விக்கு விடை கிடைக்கிறது. நுளம்ப மன்னர்கள் பரம்பரை பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அத்திமல்லன் யார் என்பதை சின்னக்குத்தூர் நடுகற்கள் கூறுகின்றன.

சோழர் காலத்தில் வேளாளரின் நிலை எவ்வாறு இருந்தது? நில விற்பனை முறை, நிலக்குத்தகை பற்றிய தகவல்கள், திருவிடைமருதூரில் நடந்த ஒரு வழக்கு பற்றிய பதிவு, பேரரசர்கள், மன்னர்களின் நினைவுச் சின்னங்கள், பள்ளிப்படைகள், தமிழகத்து, கொங்குநாட்டுக் காசுகள், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகச் சீர்திருத்தம் பற்றிக் கூறும் கல்வெட்டுகள், தொல் தமிழ்,

பிராகிருத எழுத்தின் தோற்றம் முதலிய தொல்லியல் தொடர்பான அரிய தகவல்களும் புகைப்படங்களும் உள்ளன. நூலின் தலைப்புக்கேற்ற படைப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT