நூல் அரங்கம்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை (பாகம்- 1)

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை (பாகம்- 1): தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்; பக்.500; ரூ. 200; வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; 044 - 2462 1110.

சுவாமி கமலாத்மானந்தர்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை (பாகம்- 1): தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்; பக்.500; ரூ. 200; வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; 044 - 2462 1110.

இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர்.

விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள்.

பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் பரவலாகத் தெரிய வராததால், பாரதியார் மீதான விவேகானந்தரின் தாக்கம் முழுமையாகப் பதிவாகவில்லை. இந்நிலையில், இவ்விரு மகான்களிடையிலான சிந்தனை உறவை ஆதாரப்பூர்வமான தனது தொகுப்பால் இந்நூலில் நிலைநாட்டி இருக்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

விவேகானந்தர் குறித்த பாரதியாரின் கட்டுரைகள், விவேகானந்தருடன் தொடர்புடையவர்கள் பற்றிய பாரதியாரின் கருத்துகள், பாரதியார் நடத்திய பத்திரிகைகளில் வெளியான ராமகிருஷ்ணர் இயக்கம் தொடர்பான செய்திகள் என பலவற்றையும் தொகுத்திருப்பது சிறப்பாகும்.

பாரதியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாலகங்காதர திலகர், மண்டயம் எஸ்.ஸ்ரீநிவாசாச்சாரியார், பாரதியாரின் குடும்பத்தினர் உள்பட பலர் எழுதியுள்ள கட்டுரைகள், இவ்விரு மகான்களிடையிலான கருத்திணக்கத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. விவேகானந்தர்- பாரதி ஆய்வுக்கு இந்நூல் மிகப் பெரிய வரப் பிரசாதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT