வளமும் நலமும் அருளும் வலம்புரி, இடம்புரிச் சங்கு பூஜைகளும், பயன்களும் - மு.இலக்குமணப்பெருமாள் நாயுடு; பக்.656; ரூ.490; உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம், விற்பனையாளர்: கோதை நாச்சியார் அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி -2; )0431-2707475.
எந்த வீட்டில் வலம்புரிச் சங்கு இருக்கிறதோ, தினசரி வழிபாடு செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் செல்வத்திற்குக் குறைவு இருக்காது. சங்கு இருக்கும் வீட்டில் துர்சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அணுகாது. திருஷ்ட்டிகள் அகலும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும், குடும்பத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை அமையாது, அவ்வாறு சூழ்நிலை அமைந்தாலும், கடன் சுலபத்தில் அடைபடும், வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் அகலும், அரசாங்க வழி மேன்மை உண்டாகும், அன்னத்திற்குக் குறைவு ஏற்படாது, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும், இப்படிப்பட்ட ஏராளமான நன்மைகள் வலம்புரிச்சங்கால் உண்டாகின்றன என்கிறார் நூலாசிரியர்.
அதுமட்டுமல்ல, சங்கின் தோற்றம், சங்கின் வகைகள், அவற்றின் தமிழ், அறிவியல் பெயர்கள், அவை கிடைக்கக்கூடிய இடங்கள், சங்கின் பெயர் கொண்ட திருக்கோயில்கள், தெய்வங்களும் சங்கும், கிறிஸ்துவ இலக்கியத்தில், தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தில், வரலாற்றில், இசைத் துறையில் சங்கு பற்றிய பதிவுகள், தமிழர் வாழ்வில் சங்குகள் பின்னிப் பிணைந்துள்ள விதம் போன்றவற்றை வரலாறு, புராணம், கல்வெட்டு, செப்பேடு, நாட்டியம், பழங்காசுகள், அகழ்வாராய்ச்சி, மருத்துவ நூல்கள், நாளேடுகள், வார ஏடுகள், மாத இதழ்களில் உள்ள சங்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சான்றுகளுடன் பதிவுசெய்துள்ளார். படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய ஆய்வுத் தொகுப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.