நூல் அரங்கம்

நூறு நிலங்களின் மலை

நூறு நிலங்களின் மலை - ஜெயமோகன்; பக்.128; ரூ.130; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.

ஜெயமோகன்

நூறு நிலங்களின் மலை - ஜெயமோகன்; பக்.128; ரூ.130; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.
இந்தியாவின் குறுக்கே நூலாசிரியரும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008 இல் மேற்கொண்ட பயணத்தின் பதிவு இந்த நூல். விமானத்தில் பெங்களூரில் ஏறி தில்லியில் இறங்கி மற்றொரு விமானத்தில் ஸ்ரீநகரை அடைவதாகத் தொடங்குகிறது பயணம். 
சோனாமார்க், கார்கில், ஸீரு சமவெளி, பென்ஸீலா கணவாய், லே நகரம், முல்பெக், நுப்ரா சமவெளி, யாராப்úஸா ஏரி, திங்கித் மடலாயம், சங்லா கணவாய், ஷே நகரம், மூர் சமவெளி, இமயமலைப் பகுதிகள், லே - மணாலி நெடுஞ்சாலை என பரந்து விரியும் பயணத்தில் நம்மையும் சக பயணியாக்கி விடுகிறார் நூலாசிரியர்.
"யானையின் விலாவில் ஊர்ந்து செல்லும் பேன் போல் எங்கள் கார் சென்றது. குலுங்கி அதிர்ந்து சில சமயம் அலைகளில் படகு போல. சிலசமயம் யானை மேல் அம்பாரி போல. சில சமயம் ரங்கராட்டினத்தில் இறங்கும் தொட்டி போல, மதியம் கார்கிலைச் சென்றடைந்தோம்' என்ற பதிவு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
லடாக் செல்லும் சாலையில் உள்ள முல்பெக் நகரில் ஒற்றைப் பெரும் பாறையில் பத்து மீட்டர் உயர மைத்ரேய புத்தரின் புடைப்புச் சிலை, பனிப்பாளங்கள், பாலை வனங்கள், நன்னீர் ஏரி, பாங்காங் ஏரி என்னும் குட்டிக் கடல், இரட்டைத் திமில் பாக்டீரியன் ஒட்டகங்கள், உருளைக்கற்களின் பாதையில் மலையின் விளிம்பில் ஒட்டிக் கொண்டு ஊர்ந்து கார்டெங்கல கணவாய் சென்றடைதல் என சுவாரசியங்களும் ஆபத்தும், சாகசமும் நிறைந்ததாய் முடிகிறது பயணம்.
அபாயகரமான பல சாலைகளில் பயணித்து, இரவெல்லாம் சரியாக தூக்கமில்லாது, ஆக்ஸிஜன் மிகக் குறைவான இடங்களில் தங்கி சிரமப்பட்டாலும், வாசகர்களுக்கு தகவல் தொகுப்பாய் பயண அனுபவப் படைப்பை வழங்கியுள்ளார் நூலாசிரியர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சாலையில் ஓடிய கரடி! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! | வால்பாறை | Shorts

மழையும் மன இலையும்... கயாடு லோஹர்!

இன்று 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் தொடரும் மழை! தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரம்! | Chennai Rain

SCROLL FOR NEXT