அறவாணர் திறனுரைகள்
அறவாணர் திறனுரைகள் - தொகுப்பும் பதிப்பும்- க.அ.அறிவாளன், அ.அருணன் அறவாணன்; பக்.208; ரூ.180; தமிழ்க்கோட்டம், சென்னை-29;) 044-2374 4568.
நூல் அரங்கம்அறவாணர் திறனுரைகள்
அறவாணர் திறனுரைகள் - தொகுப்பும் பதிப்பும்- க.அ.அறிவாளன், அ.அருணன் அறவாணன்; பக்.208; ரூ.180; தமிழ்க்கோட்டம், சென்னை-29;) 044-2374 4568.
அறவாணர் திறனுரைகள் - தொகுப்பும் பதிப்பும்- க.அ.அறிவாளன், அ.அருணன் அறவாணன்; பக்.208; ரூ.180; தமிழ்க்கோட்டம், சென்னை-29;) 044-2374 4568.
ஒரு நூலை முழுமையாகப் படித்து, அதில் உள்ளதை "சாறு' பிழிந்து தரும் முதன்மையான பெரும் பணிதான் - பகுதிதான் அணிந்துரை. அணிந்துரையில் அந்நூலின் தரம் மட்டுமல்ல, நூலாசிரியரின் தனித்தன்மையும், தனிச்சிறப்பும்கூட வெளிப்படும்.
அந்த வகையில், பேராசிரியர் க.ப. அறவாணன், பலருடைய நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகளின் மூன்றாவது தொகுதியான இந்நூல், எழுபத்தாறு அணிந்துரைகளைத் தாங்கி, "திறனுரைகளாக' வெளிவந்துள்ளது.
தன்னோடு பழகியவர்கள், நண்பர்கள், மாணவர்கள் என்றல்ல, தமது வாழ்க்கைத் துணைவியாரின் நூலுக்கும் அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு நூலுக்கும் அவர் வழங்கிய அணிந்துரைகளுக்கு சிறந்த- புதுமையான தலைப்பு கொடுத்திருப்பது; கால வரிசைப்படுத்தியுள்ளது; அணிந்துரை வழங்கிய அனைத்து நூல்களின் முழு விவரங்களையும் தந்திருப்பது.
"திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு' எனும் நூலுக்கு "பேச்சும் மூச்சும் நினைப்பும் அனைத்தும் எடுத்த வேலையும் கையுமாக இருப்பவர்' என்று தலைப்பிட்டு, அந்நூலாசிரியரின் சிறந்த பல பண்புகளை எடுத்துரைத்து, "அவருடைய அந்தப் பண்புகள்தாம் இந்நூலின் தாய்மை மூலங்கள்' என்று முடித்திருக்கிறார். இப்பெருமைக்குரிய நூலாசிரியர், க.ப.அ.வின் துணைவியார்தான்.
ஆசிரியரும், மாணவரும், பிறரும் படித்துப் பயன்பெறத்தக்க செறிவான பல கருத்துகள் ஒவ்வோர் அணிந்துரையிலும் உள்ளன என்றாலும், "டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரிக் கருத்தரங்கக் கோவை'க்கு வழங்கிய "அடுத்த நூற்றாண்டை நோக்கி...' அணிந்துரையில், ஆசிரியரும் மாணவரும் தம் தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கான உயரிய சிந்தனைகளை நபிகள் நாயகம்(ஸல்) வாழ்க்கை நிகழ்வோடு முடித்திருப்பதும், வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடையே உள்ள இடைவெளி முற்றுமாக நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்தனைக்குரியவை.