நூல் அரங்கம்

சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார் - க.ப.அறவாணன்; பக்.232; ரூ.200; தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. 

DIN

சமூகவியல் பார்வையில் பாரதியார் - க.ப.அறவாணன்; பக்.232; ரூ.200; தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29.
 மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல்.
 பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் பார்க்கிறது.
 பாரதியின் படைப்புகளில் இருந்து பல சுவையான பகுதிகளை எடுத்துக்காட்டுகளாக நூலாசிரியர் கூறியிருப்பது, பாரதியைப் பற்றிய பல புதிய வெளிச்சங்களை நமக்குள் பாய்ச்சுகிறது.
 பாரதியின் மறைவுக்குப் பிறகும் அவருடைய தாக்கம் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகில் இருந்தது என்பதையும், அவர் வழித்தோன்றல்களான கவிஞர்களையும் படைப்பாளிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. பாரதியாரைப் பற்றிய தெளிவான புரிதலை வந்தடைய இந்நூல் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT