முகப்பு
நூல் அரங்கம்

முஹம்மது: பேரன்பும் பெருங்கோபமும்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

முஹம்மது: பேரன்பும் பெருங்கோபமும் - பைம்பொழில் மீரான், பக். 280, ரூ. 250, ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்வொர்க், 27, பகிருதீன் ஷாகிப் தெரு, பெரம்பூர், சென்னை -11.

நபிகள் நாயகம் முஹம்மது பற்றி ஆங்கிலத்தில் (முஸ்லிம் அல்லாதவர்களாலும் எழுதப்பட்ட)  பல விரிவான அறிமுக - ஆய்வு நூல்கள் கிடைக்கின்றன. தமிழில் குறைவு.  இதன்வழியில் முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்டதெனினும் இஸ்லாமியர் அல்லாதோரும் நபிகள் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டுள்ளது. 

அவரை இன்றும் இவ்வுலகம் ஏதோ ஒருவகையில் அறிய, புரிந்துகொள்ள முயற்சிகள் நடக்கின்றன. அவருடைய பேரன்புக்கான காரண காரியங்களை விளக்குவதுடன், பெருங்கோபம் கொண்ட தருணங்களின் பின்னணிகளையும் தக்க வகையில் புரிந்துகொள்ளுமாறு நூல்  நெடுகிலும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

அரபு தேசம், வாழ்க்கை, இஸ்லாம், போர்க்களங்கள், இல்லத்தரசிகள், பொன்மொழிகள் என ஆறு அத்தியாயங்களில் நபிகளின் பரந்த  வாழ்வின் துளிகளைப் பதிவு செய்துள்ளார். அரபுதேசத்தில் அன்றைய பின்புலத்தைக் குறிப்பிடும் ஆசிரியர், வாழ்க்கை என்ற நூலின் பெரும் அத்தியாயத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வுடன் சிறப்பிக்கத்தக்க அவருடைய பழக்க வழக்கங்களையும் விவரிக்கிறார்.  பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் தரக் கூடிய தகவல்கள் இஸ்லாம் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆங்காங்கே நபிகள் நாயகத்தின் தலைசிறந்த பொன்மொழிகள் கட்டமிட்டுத் தரப்பட்டிருக்கும், மிகப் பழைமையான நூல்களில் காணப்படும் பாணி,  இந்த நூலுக்கு மிகச் சிறப்பு. பல்வேறு விஷயங்களையும் புரிந்துகொள்ள உதவும் அழகிய நூல். எளிய மொழியில் கோர்வையாக எழுதப்பட்டிருப்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அழகிய வரவு.

முழு கட்டுரையைப் படிக்க →