முகப்பு
நூல் அரங்கம்

பெரிய வாய்க்கா தெரு

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

பெரிய வாய்க்கா தெரு (சிறுகதைகள்) - பாரதி வசந்தன்; பக். 336; ரூ.350; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 9940446650.

புதுச்சேரி மண்ணின் மைந்தரான நூலாசிரியர், தன் மண் சார்ந்த மக்களின் உணர்வுகள், பிரச்னைகளை மையப்படுத்தி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். ஏற்கெனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகள்தான் என்றாலும், அனைத்தையும் ஒரே மூச்சில் படிக்கும்போது நூலாசிரியரின் பன்முகப் பார்வையும், ஒவ்வொரு கதைக் கருவுக்கும் உள்ள வித்தியாசங்களும், சொல்லாடலும் வியப்பை ஏற்படுத்துகின்றன. 

பெரிய வாய்க்கா தெரு, வீடுபேறு, ரோபோ மரங்கள், மோரிசான் தோட்டம், முடத்தெங்கு, அவரவர் பாடு, அலிபாபாவும் 30 திருடர்களும் உள்ளிட்ட 25 சிறுகதைகளும் மனதைக் கவர்கின்றன. 

'வீடுபேறு' கதையின் நாயகி, கம்பன் நகர் என்ற அழகிய பகுதியில் குடியேற ஆசைப்படுகிறாள். ஆனால், இறுதியில் பூமியான்பேட்டை என்ற அவளுக்குப் பிடிக்காத பகுதியில் குடியேற சம்மதம் தெரிவிக்கிறாள். இந்த மாற்றத்துக்கு அவளது பெற்றோர் காரணம் என்பது கதையில் ஒரு திருப்பம். 'பெரிய வாய்க்கா தெரு' கதையின் முடிவற்ற முடிவு மனதைக் கனக்க வைக்கிறது. 'ரோபோ மரங்கள்' கதை அறிவியலையும், வாழ்வியலையும் பேசுகிறது.

பக்கத்தில் இருக்கும் புதுச்சேரியில் நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளதை இக்கதைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. படித்து முடிக்கையில் புதுச்சேரியில் சில காலம் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு மனதில் தங்குகிறது. அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

முழு கட்டுரையைப் படிக்க →