கலைஞர் மு.கருணாநிதி வரலாறு - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் (தமிழில் - சந்தியா நடராஜன்) ; பக். 624; ரூ.900; வ.உ.சி. நூலகம், சென்னை-14; ✆ 98404 44841.
'கருணாநிதி ஏ லைப்' என்ற நூலாசிரியரின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த நூல். 5 முறை முதல்வர், 50 ஆண்டுகள் திமுக தலைவர், இலக்கியவாதி, வசனகர்த்தா என பன்முக ஆளுமை கொண்ட கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்து பல நூல்கள் வந்துள்ளன. அவரே 'நெஞ்சுக்கு நீதி' என்ற நூலை எழுதியிருந்தார்.
அந்த வரிசையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் கருணாநிதியை இன்னும் புதியதாக அறிமுகப்படுத்துகிறது. அவருடனான பலமணி நேர உரையாடல், நேர்காணல்களில் இருந்து கிடைத்த தகவல்களை நூலில் பயன்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
'நில உடைமைச் சமூகமும், விளிம்புநிலை கலைஞர்களும் குடிகொண்ட நிலம்' என்ற தலைப்பிலான கட்டுரை முதல் அஸ்தமன ஆண்டுகள் என்ற கட்டுரை வரை பல்வேறு தலைப்புகளில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறாக மட்டுமின்றி, ஆய்வு நோக்கிலும் விவரித்திருப்பது புதுமையானது.
திமுக - அதிமுகவை இணைப்பதற்காக, ஜனதா கட்சி நிறுவனர்களின் ஒருவரான பிஜு பட்நாயக் மேற்கொண்ட முயற்சியால் 1979 செப்டம்பரில் கருணாநிதி- எம்ஜிஆர் இடையே நடைபெற்ற சந்திப்பும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது குறித்தும் விவரித்துள்ள நூலாசிரியர், மேலும் பல அரிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் கருணாநிதிக்கு எதிராக எழுப்பப்படும் விமர்சனங்களை ஆழமான கருத்துகளுடன் மறுதலிக்கிறது ஒரு கட்டுரை.
பின்னிணைப்பில், 'புகைப்பட வரலாறு' எனும் தலைப்பில், அரிய பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசியல்வாதிகளில் தனித்துவம் பெற்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு சுவைபடத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.