முகப்பு
நூல் அரங்கம்

சங்கவாதியின் சரித்திரம்

Updated On : 13 டிசம்பர், 2023 at 6:24 PM
பகிர்:

சங்கவாதியின் சரித்திரம் - இரா.போஸ்;  பக்.320; ரூ.300;  ரெயின்போ வெளியீடு, சென்னை-5; ✆ 98400 00912.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவராக இருந்த நூலாசிரியர் தனது சுய சரிதையை நூலாக்கியுள்ளார்.  தனது குழந்தைப் பருவம் தொடங்கி, கல்வி,  அரசியல் ஆர்வம், பணிக்குச் சென்றது, சங்கப் பணிகள், ஓய்வு பெற்றது, சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், என்று 77 தலைப்புகளில் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இவரது வரலாற்று நூலில் முழுக்க, முழுக்கச் சங்கப் பணிகளும், மாநாடுகள், அரசுகளின் நடவடிக்கைகள் என்றே எழுதப்பட்டுள்ளன.

Advertisement

'மணியம்' என்ற முறையை ஒழித்து, சாமானியர்களையும் கிராம நிர்வாக அலுவலர்களாக்கியதால் எம்ஜிஆரை தெய்வமாக வழிபட வேண்டும் என்று கூறுகிறார் நூலாசிரியர். கருணாநிதியின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் களத்துக்கு வந்ததாகக் கூறும் அவர், ஜெயலலிதா போன்ற தலைவர்களோடும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதியுள்ளார்.

மாறி, மாறி வந்த திமுக, அதிமுக அரசுகளால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், சலுகைகள்,  போராட்டங்களால் கிடைத்த பலன்களும் பாதிப்புகளும் என்று வருவாய்த் துறையின் வரலாறாகவே தென்படுகிறது. தனிவாழ்க்கையில் சோதனைகள் இருந்தாலும் பொது வாழ்க்கையில் வரும்போது,  தனித்தனியே பார்க்க வேண்டியது தலைவனுக்குரிய அழகு.

சாதனையாளர்களின் வாழ்க்கைக்குப் பின்னால் எத்தனை சோதனைகள் நிறைந்திருக்கின்றன என்பதை தெளிவாக்குகிறது இந்த நூல்.  வருவாய்த் துறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.