முகப்பு
நூல் அரங்கம்

மகாகவி பாரதியார்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மகாகவி பாரதியார் - வ.ராமசாமி, (பதிப்பாசிரியர் வீ.அரசு); பக்.176; ரூ.250; சாகித்திய அகாதெமி, சென்னை 18; ✆ 044 - 24311741.

சாகித்திய அகாதெமியானது  அரிய நூல் வெளியீட்டு திட்டத்தின் மூலம் காலத்தால் அழியாத பல நூல்களை மறுபதிப்பு செய்கிறது. அந்த வரிசையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பாரதியை காட்சிப்படுத்தினாலும் புதுச்சேரி சென்று பாரதியுடன் பயணித்த வ.ராமசாமி தனது சுவையான அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் மரபு சார்ந்த மொழி மூலம் எடுத்துரைக்கிறார். விடுதலைப் போராட்ட வீரர்கள் முதல் புஷ் வண்டி ஓட்டும் உழைக்கும் தலித் மக்கள் வரை பாரதியின் நட்பையும் பாரதியின் சின்ன சின்ன ஆசைகளையும் வ.ரா.வின் பதிவு மூலம் அறிய முடிகிறது.

'பாரதியின் உருவம்'  எனும் அத்தியாயம் பாரதியாரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. காந்திஜியை பாரதி சந்தித்த அரிய நிகழ்வையும் கனகலிங்கத்துக்கு பூணூல் போட்டதையும் வ.ரா. நேரடி காட்சியாக இந்நூலில் கூறுகிறார். புதுச்சேரியில் இருந்தபோது பாரதியின் ஏழ்மையை நினைத்து வருத்தப்படுவோருக்கு கிடைக்கும் தண்டனையை இதில் காணலாம். பாரதி மட்டுமல்லாமல் அரவிந்தரின் புதுச்சேரி வாழ்க்கையை பேசும் வரலாற்றுச் சுவடாக இந்நூல் விளங்குகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பாற்றலை அவர் வாழ்ந்த சூழலைக் கொண்டு அறிய முடியும். அந்த வகையில் பாரதியுடன் வ.ரா.வின் இந்த பயணம் ஒரு வரலாற்று ஆவணமாக உள்ளது. பாரதியுடன் பயணிக்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு இந்த நூல் ஒரு ஊன்றுகோல். 

முழு கட்டுரையைப் படிக்க →