முகப்பு
நூல் அரங்கம்

மகாபாரதம் மாபெரும் உரையாடல்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மகாபாரதம் மாபெரும் உரையாடல் -  ஹரிகிருஷ்ணன்; பக். 480; ரூ. 550; சுவாசம் பதிப்பகம், சென்னை-127;  ✆ 81480 66645.

நாம் பயிலும் மகாபாரதம், மூலநூலாசிரியரான வியாசர் எழுதிய நூலை மீறுவதாவும்,  பல இடைச்செருகல்கள், ஆர்வக்கோளாறான புதிய விளக்கங்களைக் கொண்டதாகவும், முக்கியமான பல அம்சங்கள் விடுபட்டதாகவும் உள்ளது என்பதை பலரும் அறிவதில்லை.  நாம் பயில்வது வெறும் கதைச்சுருக்கமே. அதாவது, கடையில் கிடைக்கும் தேன் புட்டி போன்றது இது. 

மகாபாரதத்தை அதன் முழு வடிவில் படித்தால் மலைமுகட்டில் உயர்ந்த மரக்கொம்பில் தொங்கும் தேன்கூட்டின் மூலச்சுவையை உணர முடியும் என்பதே நூலாசிரியரின் விருப்பம்.

கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும், வியாச பாரதம் - கும்பகோணம் ஆய்வுப்பதிப்பும் இந்நூலாசிரியருக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன. வியாசர் எழுதிய பிரம்மாண்டமான  மகாபாரதக் கதையை எவ்வாறு படிக்க வேண்டும் என்று வழிகாட்டும் அற்புதமான ஆய்வு நூலின் முதல் பாகம் இது.

இந்நூல் மகாபாரதக் கதையை வரிசைக்கிரமமாகச் சொல்லிச் செல்வதல்ல; மாறாக, நாம் படிக்கும் பிரதிகளில் விடுபட்ட, நாம் உய்த்துணர வேண்டிய மூல நூலின் காத்திரமான பதிவுகளை அறியச் செய்வதே. உதாரணமாக, திருதராஷ்டிரன் ஏன் மன்னனாக முடியவில்லை, துரியோதனன் ஒருபோதும் இளவரசனாக ஏன் முடிசூட்டப்படவில்லை என்ற கேள்விகளை ஆசிரியர் கேட்கும்போது வியப்பாக இருக்கிறது.  இந்தக் கேள்விகளே உண்மை. 

இது போன்ற நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கேள்விகளை எழுப்பி, நுணுக்கமாகவும், தர்க்கரீதியாகவும், மூலநூலின் ஆதாரத்துடனும் பதில் அளிக்கிறார் நூலாசிரியர். பாரத ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →