நூல் அரங்கம்

கலைமகள் தீபாவளி மலர்

DIN

கலைமகள் தீபாவளி மலர் - கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன்  ; பக்.218; ரூ. 200; கலைமகள் பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-4; ✆044- 2498 1699.

ஆன்மிகம், சிறுகதை, இலக்கியம், அறிவியல் என ஒரு கதம்ப மாலையாக உருவாகியுள்ளது  இந்த மலர்.

ஆன்மிக சுற்றுலா பகுதியில் சிதம்பரம் நடராஜர் ஆலயம், பழனி முருகன் ஆலயம், திருப்பாம்புரம் முதல் அமெரிக்காவில் அனுமனுக்கு எழுப்பிய ஆலயம் வரை வண்ணப் படங்களுடன் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. 

மலரின் ஒரு சிறப்பம்சம் தமிழ் இதழ்களின் இன்றைய முன்னணி இளம் ஓவியர்கள் இருவர் குறித்த நேர்காணல்கள்.  'ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்ற மனிதநேய பிரகடனம் செய்த வள்ளலார் பற்றிய பெ.சிதம்பரநாதனின் கட்டுரை நெகிழ்ச்சியை தருகிறது.

சுவாமி அபவர்காநந்தர் எழுதியுள்ள 'ஸ்ரீ சாக்தம்' என்னும் கட்டுரை தெளிவான நடையில் பாரதத்தின் அன்னை வழிபாட்டை விளக்கி கூறுகிறது.

பிரபலங்களின் தரமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை மலருக்கு மணம் சேர்க்கின்றன. வேதாந்தம் என்பது இந்திய தத்துவ இயலில் முக்கியத்  துறையாகும்.  பாரதியார் தன் கவிதைகளில் வேதாந்தத்தை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எப்படி கையாண்டுள்ளார் என்பதை விளக்குகிறது 'பாரதியும் வேதாந்தமும்' என்கிற கட்டுரை.

வேதாந்தத்தில் குறிப்பிடும் மகாவாக்கியங்களுக்கான விளக்கத்தை மகாகவி பல பாடல்களில் வெளிப்படையாகவும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், சொல்லியிருக்கிறார் என்று நன்கு தெளிவுபடச் சொல்கிறது குச்சனூர் கோவிந்தராஜன் தீட்டியுள்ள கட்டுரை. 

நிறைவான ஆன்மிக, இலக்கிய மலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT