முகப்பு
நூல் அரங்கம்

என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்

Updated On : 30 அக்டோபர், 2023 at 7:30 PM
பகிர்:

என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள் - தமிழருவி மணியன்; பக்.208; ரூ.200; கற்பகம் புத்தகாலயம், சென்னை- 17; ✆ 044-24314347.

ஏறக்குறைய ஐயாயிரம் திரையிசைப் பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.  அவற்றுள் பல பாடல்கள் ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, பைரன் ஆகியோரின் படைப்புகளுக்கு நிகரானவை. கவியரசரின் உலகத் தரம் வாய்ந்த எத்தனையோ பாடல்களில் 17 பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  காலம் வென்ற அக்கானங்களின் மூலம் என்னவென்றும், முகவரி என்னவென்றும் தமிழருவி மணியன் திறனாய்ந்திருக்கிறார்.

ஆறு மனமே ஆறு.., பிறக்கும்போதும் அழுகின்றாய்.., அண்ணன் என்னடா, தம்பி என்னடா.. உள்ளிட்ட தத்துவ சோகப்பாடல்களிலும், எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..., ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் உள்ளிட்ட துள்ளல் இசைப் பாடல்களிலும், ஓராயிரம் பார்வையிலே..., பொன்னை விரும்பும் பூமியிலே... உள்ளிட்ட காதல் பாடல்களிலும் கவியரசரின் மொழி ஆளுமையும், வலி நிறைந்த சொந்த அனுபவத்தின் வழியாக வந்து விழுந்த வரிகளையும் பல்வேறு கோணங்களில் நூலாசிரியர் சுவைபட விவரிக்கிறார்.

Advertisement

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்று திரையிலக்கியம் தந்ததோடு மட்டுமல்லாது, உணர்ச்சியின் முழு வடிவமாக என்றென்றும் வாழ்பவர் கண்ணதாசன் என்பதை இந்நூல் விவரிக்கிறது.  மனிதனின் வாழ்க்கையிலும், உலக நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும் அங்கே கண்ணதாசனின் பாடலொன்று ஒலிக்கும் என்பதை மிக நுணுக்கமாக அகழாய்வு செய்து அவற்றுக்குள் இருக்கும் அமுத ஊற்றை அடையாளம் காட்டுகிறது இந்நூல். திரை ரசிகர்கள், இலக்கியவாதிகளுக்கு ஏற்ற நூல் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.