முகப்பு
நூல் அரங்கம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி

Updated On : 4 செப்டம்பர், 2023 at 7:16 PM
பகிர்:

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி - விளக்கவுரை - ஆச்சார்யா மணி; பக். 724; ரூ.900; அபயம் பப்ளிஷர்ஸ், கோவை 641015;  ✆ 90956 05546.

உபநிஷதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் ஆகியவற்றுக்கு ஆதிசங்கரர் உரைகள் எழுதி என்றென்றும் உள்ள சனாதன தத்துவத்தை விளக்கினார்.

அதுவும் போதாது என்று, வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதற்கு அவர் எழுதிய பிரகரண (விளக்க) நூல்களில் விவேக சூடாமணி முக்கியமானது.

Advertisement

தத்துவத்தை பகுத்து அறிய உதவும் விளக்க நூல்களில் தலையாயது விவேகசூடாமணி.

உயிரினங்கள் மனிதப்பிறவி அடைவதும் அப்பிறவி ஞானத் தேடலில் ஈடுபட்டு முக்தியை நாடுவதும் மிக அரிது. முக்தி அடைய ஞானம் வேண்டும். அதற்கான சரியான குருவை அணுகி கேட்டறிந்து ஞானம் பெற வேண்டும்.

அவ்வாறு, சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கும் அமைப்பில் 580 ஸ்லோகங்களைக் கொண்டது இந்த நூல். கானல் நீர் பொய் என்று அறிந்தவர் அதை விட்டு விலகுகிறார். அறியாதவர் நீரை சுவைக்க அதை நாடி ஓடுகிறார். அஞ்ஞானம் பொய்யை மெய்யென காண வைக்கிறது.   இதுபோன்ற அன்றாட நிகழ்வு உதாரணங்களுடன் குரு தனது மாணாக்கனுக்கு வேதாந்தத்தை விளக்குகிறார். இதற்கு எளிய தமிழில் விளக்க உரை அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

சம்ஸ்கிருத மூல ஸ்லோகங்களை சரியான உச்சரிப்புடன் படிக்க உதவும் வகையில் ஒலிக்குறிப்புகளுடன், பதவுரை அளித்து விளக்கம் அளித்துள்ளார். நல்ல முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.