முகப்பு
நூல் அரங்கம்

பிரம்ம சாமுண்டீஸ்வரி

Updated On : 25 செப்டம்பர், 2023 at 3:20 PM
பகிர்:

பிரம்ம சாமுண்டீஸ்வரி - (சிவசங்கரி-குவிகம் சிறுகதைத் தேர்வு (2022-23); பக். 148; ரூ.150; குவிகம் பதிப்பகம்; சென்னை-78; ✆ 8939604745.

பல்வேறு இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளை மாதம் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டுள்ள தொகுப்பு நூல். ஒவ்வொரு சிறுகதையும் தனித்தனி கதைக் களத்தைக் கொண்டிருப்பது சிறப்பு. அனுபவங்களின் தொகுப்புதான் சிறுகதை என சிறுகதைகளுக்கான இலக்கணம் குறித்து எழுத்தாளர் சிவசங்கரி குறிப்பிட்டிருப்பதைப்போல ஒவ்வொரு கதையும் வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களைக் கடத்துகிறது.

பஞ்சாலை ஒன்றில் தொழிலாளர்களுக்கு சுகாதாரம், உடல்நலம் குறித்து வகுப்பு எடுப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுவிட நடையாய் நடக்கும் நாயகியின் தவிப்பையும், ஆலையில் அவர் எதிர்கொள்ளும் ஏமாற்றத்தையும் சொல்கிறது 'பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து வெளியேற்றம்' சிறுகதை.

Advertisement

அரசு மருத்துவமனை பிணவறை என்ற வித்தியாசமான கதைக் களத்தில் பிணவறை உதவியாளரின் அனுபவங்களை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது 'பிரம்ம சாமுண்டீஸ்வரி' சிறுகதை. உடற்கூறு ஆய்வுக்காக கிடத்தப்பட்டிருக்கும் இளம்பெண்ணின் உடலை தில்லை காளி அம்மனாக கற்பனை செய்யும் பிணவறை உதவியாளரின் மனத்தாக்கம் வாசிப்பவர்களின் மனதிலும் ஏற்படுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்குலைவை ஒரு சலூன் கடையில் காத்திருப்பவரின் சிந்தனையில் விவரிக்கிறது 'பாட்டு வெயில்' சிறுகதை.

நூலில் இடம்பெற்றுள்ள பிற சிறுகதைகளும் சாமானியர்களின் அனுபவ நீட்சியாக இருப்பதும், நுட்பமான மன உணர்வுகளை இயல்பான எழுத்து நடையில் வெளிப்படுத்தியிருப்பதும் சிறுகதைத் தேர்வுக்கு நியாயம் செய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.