மறக்க முடியாத திரை இசை (பாகம் - 1)
மறக்க முடியாத திரை இசை (பாகம் - 1) - பி.ஜி.எஸ். மணியன்; பக். 248; ரூ. 250; வைகுந்த் பதிப்பகம், நாகர்கோவில் - 629 002; ✆ 94420 77268.
திரைப்படம் பேசத் தொடங்கிய காலத்தில், தமிழ்ப் பாடல்களே கோலோச்சின. 'செவிக்கினிய நாற்பது பாடல்கள்', 'மனதை மயக்கும் ஐம்பது பாடல்கள்' என்றே படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. அதன்பின்னர், செறிவான கதைகளே படத்துக்கு அடித்தளமாக மாறியபோது, பாடல்களின் எண்ணிக்கை குறைந்தது; ஆனாலும், அவற்றுக்கான முக்கியத்துவம் குறையவில்லை. பாடல்களுக்காகவே வெற்றியடைந்த படங்களும் இருந்தன.
இசையமைப்பாளர் சிலரின் பாடல்களை எடுத்துக்கொண்டு, அவற்றில் உள்ள கவிதை நயம், ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ள ராகம், இசைச் சிறப்பு, பாடியவர்களின் சிறப்பான பங்களிப்பு, பாடல் தொடர்புடைய சில சுவையான நிகழ்வுகள் ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
'ராமு' படத்தில் இடம்பெற்ற 'கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்' பாடலில் தொடங்கி, 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் இடம்பெற்ற 'சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்' பாடல்வரை 38 கட்டுரைகளில் சிறப்பாக விளக்கியுள்ளார் (இவை தவிர 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படப் பாடல்கள் குறித்த தனிக்கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது).
பாரதியார் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ். விஸ்வநாதன், பாடலில் ஒரு வார்த்தை மெட்டுக்குப் பொருந்தி வராததால் அதை மாற்றித் தருவதற்காக கவிஞரை வரச் சொல்லுங்கள் என்று இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் கூறியது, சிவாஜி நடித்த 'லட்சுமி கல்யாணம்' படத்தில் இடம்பெற்ற 'யாரடா மனிதன் இங்கே' பாடலும் எம்ஜிஆர் நடித்த 'ஒளிவிளக்கு' படத்தின் 'தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?' பாடலும் ஒரே மாதிரி இருப்பதால் எம்ஜிஆர் பாடலுக்கு இசையமைக்க எம்.எஸ். விஸ்வநாதன் மறுக்க, அவரை எம்ஜிஆர் சமாதானம் செய்தது - இவை போன்ற சுவையான செய்திகள் நூல் முழுவதும் விரவியிருக்கின்றன.