முகப்பு
நூல் அரங்கம்

பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி - முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன்; பக்.98; ரூ.150; நூலாசிரியர் வெளியீடு, புதுச்சேரி-3; ✆ 94432 14962.

பாண்டிச்சேரியாக இருந்து தற்போது புதுச்சேரியாகிய பகுதி தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றாலும், தனித்துவமாக ஆதிகாலம் முதல் இருந்து வந்துள்ளதை வரலாற்று நூல்கள்

உணர்த்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியில் நாடே இருந்தபோது, புதுச்சேரி மட்டும் பிரான்ஸ் நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது.

அந்த வகையில் புதுச்சேரிக்கு அந்நிய நாட்டவர்கள் வருகை, பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் ஆளுகைக்கு உள்பட்டதாக்கிக் கொண்டதெப்படி, புதுச்சேரியின் தற்போதைய நிலை உள்ளிட்ட 6 தலைப்புகளில் எளிய நடையில் நூலாசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

நில அமைப்பு, நீர்வளத்தை சுருக்கமாக விளக்கியிருக்கும் நூலாசிரியர், புதுச்சேரி ஆளுநர்களை வரிசைப்படுத்தியதுடன், அவர்களால் புதுச்சேரி நகர் நிர்மாணிக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் ஆளுநர்களில் துய்ப்ளேக்ஸின் ஆளுமை, அவர் இறுதி நாள்களில் பட்ட துயரங்கள் என படிக்கப் படிக்க வியப்பூட்டும் தகவல்கள் பல நூலெங்கும் உள்ளன. மொத்தத்தில் புதுச்சேரி குறித்து சுருக்கமான ஆதார பூர்வமான வரலாற்று நூலாக இந்நூல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. புதுச்சேரி வாழ் பகுதியினர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →