முகப்பு
நூல் அரங்கம்

நீர் மேலாண்மை

அரசுத் துறையினர், அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

நீர் மேலாண்மை - ஜெகாதா; பக்.336; ரூ. 320; அருணோதயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; 72008 36063.

'நீர் இன்றி அமையாது உலகு' என்பது சொலவடை. இந்தச் சிறப்புமிக்க நீர் அவசியத்தை நல்லதொரு முறையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

நீர் மேலாண்மையின் அவசியத்தை விளக்குவதோடு, மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நீர்நிலைகள் பராமரிப்பதில் தொடங்கி, தமிழர்கள் நீராதாரத்தைப் பெருக்கியதை நல்லதொரு முறையில் விவரித்துள்ளார்.

நீர் சேமிப்பு, வேளாண்மைக்கான அவசியம், நதிகள், ஆறுகள், ஏரிகள், முக்கிய நீர்நிலைகள், கால்வாய்கள், அணைகள் உள்பட தமிழகத்தின் ஒட்டுமொத்த நீராதாரத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

கடலுக்கு தாரை வார்க்கப்படும் நதிநீர், வரலாறு காணாத வறட்சி ஏன், மணல் கொள்ளையால் காணாமல் போகும் நிலத்தடி நீர், நீர்ப் பற்றாக்குறை, ஆழ்துளைக் கிணறுகளின

நீர்ச்சுரண்டல்கள் என்ற நீரைப் பாதிக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளதோடு, அவற்றைப் பாதுகாப்புக்கான முறைகள் குறித்தும் தெளிவுபடுத்துகிறார்.

ராஜஸ்தானில் 4,500 தடுப்பணைகள் கட்டிய 'நீர்மனிதர்' ராஜேந்தர்சிங், மத்திய பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் என 13 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்க்கும் நீர்த் தோழிகள் அமைப்பு, நதிநீர் இணைப்புக்கான அப்துல் கலாமின் ஆலோசனைகள், மேதா பட்கரின் பிரசாரம் போன்றவற்றை விவரித்துள்ள நூலாசிரியர் நீரைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அரசுகளுக்கு உணர்த்தியுள்ளார். நதிநீர் பங்கீட்டுக்கான மோதல்கள், கழிவுகளால் பாதிக்கப்படும் ஆறுகளும் நதிகளும் போன்ற பிரச்னைகளையும் கூறியுள்ளார். மொத்தத்தில், அரசுத் துறையினர், அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →